திருவரங்கத்தந்தாதி - அரங்கன் அடிகளில் அர்ப்பணம் !
பணவாளரங்கேசர்தாளிற்பரிதிவளை
நிணவாளஞ்சார்ங்கங்கதைதோளிற்சாத்தினனீணிலமேற்-
குணவாளராம்பட்டர்க்கேழேழ்பிறப்பும்குடிகுடியான்
மணவாளதாசன்யமகவந்தாதிவனைந்தனனே
பதவுரை :
நீள் நிலம் மேல் நீண்ட பூமியில்
குணவாளர் ஆம் பட்டர்க்கு குண சாலியானபராசர பட்டருக்கு
ஏழ் ஏழ் குடி அடியான் பதினான்கு தலை முறைகளிலும் தாசன் ஆன
மணவாள தாசன் அழகிய மணவாள தாசன்
யமக அந்தாதி வனைந்தனன் யமக அந்தாதிப் பாமாலையைத் தொடுத்து
பரிதி வளை சக்கரமும் சங்கமும்
நிண வாள் கொழுப்பு தோய்ந்த வாளும்
அம சார்ங்கம் அழகிய வில்லும்
கதை கதையும்
தோளில் திருக் கைகளில் கொண்ட
பண வாள் அரவின் படத்தை உடைய ஆதி சேஷன் மீது பள்ளி கொண்ட
அரங்கேசன் தாளில் ஸ்ரீ ரங்க நாதனுடைய திரு அடிகளில்
சாத்தினன் சமர்ப்பித்தான்
நிறை குறை தெரிவிக்க : sridharv1946@gmail.com
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks