Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி : காப்பு - தமிழ் வி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி : காப்பு - தமிழ் வி

    திரு வேங்கடத்து அந்தாதி : காப்பு - தமிழ் வித்தகனே ! அந்தாதி சொல்வித்து அருள் !

    நல்லந்தாதி திருவேங்கடவற்கு நான்விளம்பச்-
    சொல்லவந்தாதின்வழுபொருள்சோர்வறச்சொல்வித்தருள்
    பல்லவந்தாதிசைவண்டார்குருகைப்பரசமயம்
    வெல்லவந்தாதிமறைத்தமிழாற்செய்தவித்தகனே




    பதவுரை : நல் அந்தாதி
    சொல் அவம் தாது
    பல்லவம் தாது
    வெல்ல வந்த ஆதி

    பல்லவம் தளிர்களிலும்
    தாது பூந் துகள்களிலும்
    இசை வண்டு ஆர் இசை பாடும் வண்டுகள் மொய்க்கும்
    குருகை திருக் குருகூரில்
    பர சமயம் வெல்ல வந்து பிறமதங்களை வெல்வதற்காக அவதரித்து
    ஆதி மறைத் தமிழால்செய்த பழைய வேதங்களை தமிழ் மொழியில் அருளிய
    வித்தகனே ஞான ஸ்வரூபனே !
    நல்ல அந்தாதி நலம் தரும் அந்தாதியை
    திருவேங்கடவற்கு திரு வேங்கடமுடையானுக்காக
    நான் விளம்ப நான் பாடும்படி
    சொல் அவம் சொல் குற்றம்
    தாதின் வழு வினைப் பகுதியில் குற்றம்
    பொருள் சோர்வு பொருள் குற்றம்
    அறவை இல்லாதபடி
    சொல்வித்து அருள் சொல்ல அருள்வாய் !

    --
    Last edited by sridharv1946; 22-07-13, 12:41.
Working...
X