திரு வேங்கடத்து அந்தாதி 1/100 வேங்கடவன் திருவடிகள் நின்றதும் நடந்ததும் இருந்ததும் ஓடியதும் எங்கே ?
திருவேங்கடத்துநிலைபெற்றுநின்றனசிற்றன்னையாற்-
றருவேங்கடத்துத்தரைமேனடந்தனதாழ்பிறப்பி-
னுருவேங்கடத்துக்குளத்தேயிருந்தனவுற்றழைக்க
வருவேங்கடத்தும்பியஞ்சலென்றோடினமால்கழலே
பதவுரை : திருவேங்கடத்து
தரு + வேம் + கடத்து
உருவேங்கள் + தத்துக்கு
வருவேம் + கடத் + தும்பி
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
கடத் தும்பி மதம் கொண்ட கஜேந்திரன்
உற்று அழைக்க துன்பம் அடைந்து கூப்பிட
வருவேம் அஞ்சல் என்று வருகிறோம் பயப்படாதே என்று கூறிக்கொண்டே
ஓடின மால் கழல் விரைந்த திரு மாலினுடைய திருவடிகள்
திருவேங்கடத்து திரு வேங்கட மலையில்
நிலை பெற்று நின்றன நிலையாக நின்றுள்ளன.
சிறு அன்னையால் சிறு தாயான கைகேயின் ஆணையால்
தரு வேம் கடத்து மரங்கள் சுடும்
தரை மேல் நடந்தன நிலத்தில் நடந்து சென்றன
தாழ் பிறப்பின் உருவேங்கள் இழிந்த பிறப்பின் வடிவுடைய எங்களுடைய
தத்துக்கு ஆபத்தை நீக்குவதற்கு
உளத்தே இருந்தன மனத்தில் எழுந்தருளி இருந்தன
Bookmarks