பதவுரை : இருக்கு + ஆரணம் கரு + காரணம் பெருக்கு + ஆரணங்கின் மரு + கார் + அணவும்
இருக்கு ஆரணம் சொல்லும் ருக் முதலிய வேதங்கள் சொல்லும் எப்பொருள் இன்பமும் எல்லா பொருட்களும் , எல்லா ஆன்ந்தங்களும் , எப்பொருட்கும் கருக்காரணமும் எல்லாப் பொருட்களுக்கும் மூல காரணமும் , நல் தாயும் பிரியமுடைய நல்ல தாயும் , நல தந்தையும் ஹிதம் விரும்பும் நல்ல தந்தையும் ,
கஞ்சச்செல்வப் பெருக்கு தாமரையில் இருப்பவளும் , ஐஸ்வர்யம் நிரம்பியவளுமான ஆரணங்கின் தலைவனும் மகா லக்ஷ்மியின் கணவனும் , ஆதிப் பெரும் தெய்வமும் முதன்மையான பெருமை உடைய தெய்வமும் , மறு கார் அணவும் பொழில் மணமுள்ளதும் , மேகம் தழுவுவதுமான சோலைகளுடைய வடவேங்கட மாயவனே வடக்கே உள்ள வேங்கடமலையில் இருக்கும் திருமாலே !
Bookmarks