பூணல் யக்ஞோபவீதம்—செய்முறை விளக்கம்.

மனு: ப்ராமணனுக்கு பருத்தி பஞ்சால் செய்யப்பட்டதும், க்ஷத்ரியனுக்கு சணலினால் செய்யப்பட்டதும், வைச்யனுக்கு ஆட்டுரோமத்தினால் செய்யப்பட்டதும் யக்ஞோபவீதமாகும்.

மாதவீயம்: உபவீத.த்தை ஒன்பது நூல் உள்ளதாக செய்து, , மூன்று நூல்களை கீழாகவும், ஒன்பது நூல்களை மேலாகவும் முருக்கி செய்யவும்.:
பிறகு முடிச்சு போட்டு உபவீதம் செய்ய வேண்டும். பிறுகு ப்ரதிஷ்டை செய்து தரித்துக்கொள்ள வேண்டும்.

நூற்ற நூலை –நான்கு விரல்களில் 96 தடவை மூன்றாக சுற்றினது ஷண்ணவதி எனப்படும். அதை அப்லிங்கமான ஆபோஹிஷ்டா-ஹிரண்யவர்ணா: பவமான: என்ற மந்திரங்களால் ப்ரோக்ஷித்து பிறகு

காயத்ரியினால் த்ரிகுணிதம் மூன்றாக மடித்து முறுக்கி பிறகு உள்ளங்கையில் மூன்று தடவை அடித்து பிறகு ஆத்தி முடிச்சு போட்டு சுத்தமான இடத்தில் வைத்து நவதந்து தேவதைகள், க்ரந்தி தேவதைகள்,

இவர்களை ஆவாஹனம் செய்து பூஜித்து, :””உத்தயம்” என்ற மந்திரத்தினால் சூர்யனுக்கு காண்பித்து பிறகு யக்ஞோபவீதம் என்ற மந்திரத்தால் தரித்து கொள்ள வேண்டும்.

நவதந்து தேவதைகள்: --ஓம்காரம், அக்னி, பசு,; ஸோம: பிதர: ப்ரஜாபதி, விஷ்ணு; தர்ம: ஸகல தேவதா இவர்கள் நவதந்து தேவதைகள்.

அநேக இடங்களில் உபவீத ப்ரதிஷ்டை சொல்லப்பட்டிருக்கிறது.கொஞ்சம் மாறுதல் இருக்கலாம்.ஒன்றை அனுசரித்து செய்யவும்,

ப்ருகு: உபவீதம் ப்ருஹ்மசாரிக்கு ஒன்று; க்ருஹச்தன், வனஸ்தன் இவ்வுருவருக்கும் இரண்டு. க்ரிதண்டிசந்யாசிகளுக்கு ஒன்றும், சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரீயம் இல்லாவிடில் மூன்றாவது உபவீதம் தரித்துக்கொள்ளலாம்..

வியாஸர்: குடுமி, பூணல் இல்லாமல் செய்த கார்யம் ராக்ஷஸமாகும். அதாவது லோகத்திற்கு கெடுதலை உண்டு பண்ணும்.. கர்த்தாவிற்கு கர்மா செய்த பலன் வராது.

வேதமோதுபவர், சுமங்கலி, கன்னிகை, நியமத்திலுள்ள விதவை, இவர்கள் நூற்ற நூலை வேதமோதுகின்ற ப்ராஹ்மனன் சுத்தமான இடத்தில் அமர்ந்து வலது கை விரல்களில் ( ஒவ்வொரு சுற்றிலும் நான்கு அங்குல நீளமுள்ள நூல் வரும்படி) 96 தடவை சுற்றி அதை மூண்றாக மடித்து

முறுக்கேற்றிப் பின் நீவி சமமாக்கி மூன்று வளையமாக்கி முடி போட வேண்டும். .

இதனை இடது தோளிலிருந்து வலது இடை வரை தொங்கும்படி தரிப்பது முறை. அது தொப்புள் வறை படும் படி இருக்க வேண்டும். அதற்கு குறைந்ததும் அதிக மானதும் ஏற்றதல்ல. அதிக நீளமுள்ளதை மறுபடி பயத்தங்காய்போல் மடித்து தேவையான அளவில் முடிப்பர்.

பூணல் அறுந்து விட்டாலோ , அழுக்காகிவிட்டாலோ,, இறப்பு தீட்டு, பிறப்பு தீட்டு,முடிந்தவுடனும், சிராத்தம் ஆரம்பிக்கும் போதும்,சுப காரியங்கள் ஆரம்பிக்கும் முன்னரும், ஆவணி அவிட்டம் போதும் பூணல் மாற்றிக்கொள்ள வேண்டும்.

வேதம் ஓதும் தகுதி , உபநயனம் ஆனப்பின் வரக்கூடிய அந்தந்த வேத்திற்கான உபாகர்மாவின் போது கிடைக்கிறது. ஆவணி அவிட்டம் அன்று வேதம் வகுத்த வ்யாஸரையும் வேதத்தை கண்ட காண்டரிஷி முதலானவரையும் பூஜை செய்து அவர்களுக்கான தர்ப்பணம், ஹோமம் செய்து, தன் சாகைக்கான

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவேதத்தையும், மற்ற வேதங்களின் வேதாதி மந்திரங்களையும் குரு முகமாக உபதேசம் பெற வேண்டும்.,

வேத அத்யயன தொடக்கமே உபாகர்மாவாகும்.. உபாகர்மா அன்று தொடங்கி தை மாதம் பூர்ணிமை வரை, அனத்தியயன தினங்கள் தவிற மற்ற நாட்களில் அத்யயனம் செய்து வந்து,, தை மாத பெளர்ணமியில் அத்தியயனத்தை, மறு உபாகர்மா தினம் வறை நிறுத்த வேண்டும்.

தை மாத பெளர்ணமியில் அத்யயன உத்ஸர்ஜன கர்மா செய்ய வேண்டும்..
இந்த உத்சர்ஜனம் கர்மா செய்யாமல் உபா கர்மா அன்று ப்ராயசித்தமாக காமோகாரிஷீத் மந்யூரகாரிஷீத் நமோ நம: மந்த்ர ஜபம் செய்கிறார்கள்.

உபாகர்மாவும் உத்சர்ஜனமும் முறைப்படி செய்வதால் மந்திரங்கள் வீரியம் குறையாமல் உரிய பலனை தரும்.

தை மாத பெளர்ண.மி முதல் ஆவணி மாத பெளர்ணமி வரை வேதங்களின் அங்கங்களான சிக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜ்யோதிஷம் , கல்பம், ஆகிய ஆறு அங்கங்களை கற்க வேன்டும்.

உபாகர்மா அன்று மறுபடி தொடங்கி வேதாத்யயனம் செய்ய வேண்டும்..