திரு வேங்கடத்து அந்தாதி 7/100 வட மலையாய் ! வந்தருளாய் அஞ்சேல் என்று !

சேர்ந்துகவிக்கும்முடிகவித்தாய்சிறியேனிதயம்
சார்ந்துகவிக்கும்வரமளித்தாய்கொண்டல்தண்டலைமேல்
ஊர்ந்துகவிக்கும்வடமலையாய்பஞ்சொழுக்கியபால்
வார்ந்துகவிக்கும்பொழுதிலஞ்சேலென்றுவந்தருளே


பதவுரை :

சேர்ந்து கிஷ்கிந்தயை அடைந்து
கவிக்கும் முடி கவித்தாய் சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்தவனே !
சிறியேன் இதயம் சார்ந்து சிறியவனான எனது மனத்தில் நின்று
உகவிக்கும் வரம் அளித்தாய் மகிழவைக்கும் வரங்களைக் கொடுத்தவனே !
கொண்டல் தண்டலை மேல் ஊர்ந்து மேகங்கள் சோலை மேல் தவழ்ந்து
கவிக்கும் வடமலையாய் கவிழ்ந்து கொள்ளும் வேங்கட மலையில் உள்ளவனே !
பஞ்சு ஒழுக்கிய பால் அந்திம தசையில் பஞ்சிலிருந்து வாயில் ஒழுகும் பால்
வார்ந்து உகவிக்கும் பொழுதில் வெளியெ வழியும் பொது
அஞ்சேல் என்று வந்தருளே அஞ்சாதே என்று வந்து அருள்வாயாக !


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends