திரு வேங்கடத்து அந்தாதி 9/100 கண் வளரும் வேங்கடவா ! கண் திறந்து அருள்வாய் !
பொருதரங்கத்தும்வடத்துமனந்தபுரத்துமன்பர்
கருதரங்கத்தும்துயில்வேங்கடவாகண்பார்த்தருள்வாய்
நிருதரங்கத்துநிறம்போல்வருமந்திநேரத்தன்றில்
ஒருதரங்கத்தும்பொழுதும்பொறாள்என்னொருவல்லியே !
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பதவுரை : பொரு + தரங்கத்தும் (அலை)
கருது +அரங்கத்தும் (ஸ்ரீரங்கம்)
நிருதர் + அங்கத்து
ஒரு + தரம் + கத்தும்
பொரு தரங்கத்தும் மோதும் அலைகள் உடைய பாற்கடலிலும் ,
வடத்தும் ஆலிலையிலும்
அனந்த புரத்தும் திரு அனந்த புரத்திலும்
அன்பர் கருது அரங்கத்தும் பக்தர்கள் தியானிக்கும் ஸ்ரீரங்கத்திலும்
துயில் வேங்கடவா பள்ளி கொள்ளும் வேங்கடவா !
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் அரக்கர்கள் உடல் நிறம் போல் இருண்டு வருகிற
அந்தி நேரத்து மாலைப் பொழுதில்
அன்றில் ஒரு தரம் கத்தும் பொழுதேனும் அன்றில் ஒரு தடவை கத்துகிற நேரம் கூட
என் ஒரு வல்லியே பொறாள் என்னுடைய ஒப்பற்ற மங்கை தாங்க மாட்டாள்
கண் பார்த்து அருள்வாய் கடாக்ஷித்து அருள்வாய் !
Bookmarks