Announcement

Collapse
No announcement yet.

பள்ளிக்கூடம் :

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பள்ளிக்கூடம் :

    அந்த ஊர் ஒரு விவகாரம் பிடிச்ச ஊரு. அந்த ஊர் பள்ளிக்கூடத்துக்கு ஒரு கல்வி ஆய்வாளர் வந்தார். ஆறாம் வகுப்புல நுழைஞ்சோன எல்லாப் பசங்களும் நின்னாங்க. எல்லாத்தையும் உக்காரச் சொல்லிட்டு ஒரு பையன எழுப்பினார். நான் இப்பொ கம்ப ராமாயணத்துல இருந்து கேள்வி கேக்கறேன் சொல்லுன்னு சொல்லிட்டு...........
    "ஜனகரின் வில்லை உடைத்தது யார்?"
    பையன் அழ ஆரம்பிச்சுட்டான்.
    "சார் சத்தியமா நான் உடைக்கல......."
    ஆய்வாளருக்கு கோபம் வந்துரிச்சு. ஒரு பையன அனுப்பி தமிழ் வாத்தியார கூட்டி வரச் சொன்னாரு. தமிழ் வாத்தியார் வந்தோன............
    "என்னய்யா உன் கிளாஸ் பையன் இப்படி பதில் சொல்றான். ஜனகரின் வில்லை உடைத்தது யார்னு கேட்டா நான் இல்லனு சொல்றான்."
    "எந்த பையன் சார்?"
    "இதொ இவந்தான்"

    "சார் இவன் நல்ல பையன் சார். கண்டிப்பா இவன் உடைச்சுருக்க மாட்டான்."
    ஆய்வாளர் டென்ஷன் ஆயிட்டாரு. கூப்பிடுயா ஹெச்.எம் மை ன்னு சொல்ல அடுத்த நிமிஷம் ஹெச்.எம் ஆஜர். அவர்கிட்ட நடந்ததைச் சொன்னோன ஹெச்.எம் மெதுவா கேட்டார்.
    "சார் எந்த பையன்?"
    "இதொ இவந்தான்"
    "சார் நம்ம பள்ளிக்கூடத்துலயே இவந்தான் ரொம்ப நல்ல பையன் சார். கண்டிப்பா இவன் உடைச்சுருக்க வாய்ப்பே இல்ல. நீங்க ஒரே ஒரு நாள் டைம் கொடுங்க சார். இங்க இருக்கர பசங்கள்ள எவன் உடைச்சான்னு கண்டுபிடிச்சு உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்."
    அவ்வளோதான் கல்வி ஆய்வாளர் மண்டைய பிச்சுக்கிட்டு ஓடிட்டாரு.


    gaswami Balaji









    Rangaswami Balaji

    Rangaswami Balaj

  • #2
    Re: பள்ளிக்கூடம் :

    தினத்தந்தியில் சிரி சிந்தி என்ற ஒரு பகுதி வரும் அதுதான் என் நினைவுக்கு வந்தது இதைப்படித்ததும் வாய்விட்டுசிரிக்க ஒரு வாய்ப்பளித்ததற்கு நன்றி

    Comment


    • #3
      Re: பள்ளிக்கூடம் :

      There are so many other humorous stories like this. I will try to post other stories also whenever I find time. Let us enjoy
      reading these stories.

      Comment

      Working...
      X