திரு வேங்கடத்து அந்தாதி 11/100 வேங்கடவனை வணங்காதாரை விட்டு நீங்கு நெஞ்சமே !

அம்பரந்தாமரைபூத்தலர்ந்தன்னவவயவரை
அம்பரந்தாமரையஞ்சனவெற்பரையாடகமாம்
அம்பரந்தாமரைசூழ்ந்தாரைவாழ்த்திலரைம்புலனாம்
அம்பரந்தாமரைபோற்றிரிவாரையகனெஞ்சமே


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

பதவுரை : அம்பரம் +தாமரை
அம் + பரந்தாமரை
அம்பரம் + தாம் + அரை
அம்பரம் + தா + மரை

அம்பரம் தாமரை பூத்து அலர்ந்து அன்ன கடலில் தாமரை மலர்ந்தது போல்
அவயவரை திருமேனியில் அங்கங்களை உடையவரும் ,
அம் பரந்தாமரை அழகிய பரமபதத்திற்கு உரியவரும் ,
ஆடகம் ஆம் அம்பரம் பொன் மயமான ஆடையை
தாம் அரை சூழ்ந்தாரை இடையில் உடுத்தி உள்ளவருமான
அஞ்சன வெற்பரை திரு வேங்கடமுடையானை
வாழ்த்திலர் வணங்காதவர்களாய்
ஐம்புலன் ஆம் அம்பரம் ஐம்புலன்களாகிய வெட்ட வெளியில்
தா மரை போல் திரிவாரை தாவும் மான் போல் ஓடுபவர்களை
நெஞ்சமே அகல் மனமே விட்டு நீங்கு !