திரு வேங்கடத்து அந்தாதி 13/100 ஆரையும் ஈடேற்றும் அருள் வித்தகர் வேங்கடத்தாரே !
வேங்கடத்தாரையுமீடேற்றநின்றருள்வித்தகரைத்-
தீங்கடத்தாரைப்புனைந்தேத்திலீர்சிறியீர்பிறவி
தாங்கடத்தாரைக்கடத்துமென்றேத்துதிர்தாழ்கயத்து-
ளாங்கடத்தாரைவிலங்குமன்றோசொல்லிற்றையமற்றே
பதவுரை : வேங்கடத்து + ஆரையும்
தீங்கு + அட + தாரை (மாலை)
தாம் + கடத்தாரை (விலக்காத)
ஆம் + கட + தாரை (மத நீர்)
சிறியீர் அறிவில் சிறியவர்களே !
ஆரையும் ஈடேற்ற எல்லோரையும் காப்பாற்ற
வேங்கடத்து நின்றருள் திரு வேங்கடமலையில் எழுந்தருளி இருக்கும்
வித்தகரை ஞான ஸ்வரூபனை
தாரை புனைந்து மாலைகளை அணிவித்து
தீங்கு அட துன்பங்களை அழிக்கும்படி
ஏத்திலீர் வேண்டவில்லை !
பிறவி தாம் கடத்தாரை தனது பிறவிகளையே விலக்க முடியாத சிறு தெய்வங்களிடம்
கடத்தும் என்று எமது துன்பங்களை விலக்கவேண்டும் என்று
ஏத்துதீர் வணங்குகிறீர்கள்
தாழ்கயத்துள் ஆம் ஆழ்ந்த தடாகத்தில் முதலையிடம் அகப்பட்டுக் கொண்ட
கடம் தாரை விலங்கு அன்றோ மதநீர்பெருக்கும் மிருகமான யானை அல்லவோ
ஐயம் அற்று சொல்லிற்று சந்தேகம் இல்லாமல் பெரும் தெய்வம் யார் என்று உணர்த்தியது !
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks