திரு வேங்கடத்து அந்தாதி 15/100 வேங்கடவா ! கன்னியை கைக்கின் நீ கருணைக் கடல் அல்ல !

சென்னியிலங்கைகுவிக்குமுயிர்க்குந்திகைக்குநின்னை-
யுன்னியிலங்கையிற்கண்ணுறங்காளுயர்வீடணனை
மன்னியிலங்கையில்வாழ்கென்றவேங்கடவாணமற்றோர்
கன்னியிலங்கைக்கினின்பேர்கருணைக்கடலல்லவேபதவுரை : சென்னியில் + அம் + கை
உன்னி + இலங்கு + ஐயில்
மன்னி + இலங்கையில்
கன்னி + இலம் + கைக்கின்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஉயர் வீடணனை உயர்ந்த விபீஷணனை
மன்னி இலங்கையில் வாழ்க என்ற "நிலையாக இலங்கையில் வாழ்க" என்ற
வேங்கடவாண வேங்கட நாதா !
நின்னை உன்னி உன்னை நினைத்து என் மகள்
சென்னியில் அம் கை குவிக்கும் தன தலை மேல் கை குவிக்கிறாள் ,
உயிர்க்கும் பெருமூச்சு விடுகிறாள் ,
திகைக்கும் கலங்குகிறாள் ,
இலங்கு ஐயில் கண் உறங்காள் பிரகாசமான் வேல் போன்ற கண் துயில மாட்டாள்
மற்று ஓர் கன்னி இளம் எங்களுக்கு வேறு பெண் இல்லை
கைக்கின் நீ அவளை வெறுத்தால்
நின் பேர் கருணைக் கடல் அல்லவே உன் பெயர் கருணைக் கடல் இல்லை !