திரு வேங்கடத்து அந்தாதி 16/100 நெடுமால் நின்றும் கிடந்தும் அமர்ந்தும் இருப்பது என் நெஞ்சினிலே !
கடமாமலையின்மருப்பொசித்தாய்க்குக்கவிநடத்தத்-
தடமாமலைவற்றவாளிதொட்டாய்க்கென்றனிநெஞ்சமே
வடமாமலையுந்திருப்பாற்கடலும்வைகுந்தமும்போ-
லிடமாமலைவற்றுநின்றுங்கிடந்துமிருப்பதற்கே

பதவுரை : கட + மா + மலை
தடம் + ஆம் + அலை
வட + மா + மலை
போல் + இடம் + ஆம் + அலைவு


கட மா மலையின் மதமுடைய பெரிய மலை போன்ற யானையினது
மருப்பு ஒசித்தாய்க்கு தந்தங்களை ஒடித்தவனும்
கவி நடத்த வானரங்கள் கடந்து செல்ல
தடம் ஆம் அலை வற்ற பெரிய கடல் வற்றுமாறு
வாளி தொட்டார்க்கு ஆக்னேயாஸ்திரத்தைப பிரயோகித்த உனக்கு
வடமாமலையும் நிற்கும் வேங்கட மலையும்
திருப்பாற்கடலும் பள்ளி கொள்ளும் திருப்பாற்கடலும்
வைகுந்தமும் போல் அமரும் ஸ்ரீவைகுண்டமும் போல்
என் தனி நெஞ்சமே எனது மனம் ஒன்று தான்
அலைவு அற்று அசையாமல்
நின்றும் கிடந்தும் இருப்பதற்கு நிற்பதற்கும் படுப்பதற்கும் அமர்வதற்கும்
இடம் ஆம் மூன்றிற்கும் ஏற்ற ஒரே இடம் ஆகும்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends