சிவாலயங்களில் வழிபட வேண்டிய முறை


Click image for larger version. 

Name:	Shivalayam.jpg 
Views:	12 
Size:	70.4 KB 
ID:	917

(காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலின் 5000 ஆண்டுகள் பழமையான மா மரம் (1870ம் ஆண்டு எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம்)

Source: Raman FB1. நீராடி தூய ஆடை உடுத்தித் திருநீறு அணிந்து முடிந்தால் ருத்ராட்சமும் அணிந்து செல்ல வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends2. மலர், தேங்காய், பழம், பூ, சூடம் ஆகிய இவற்றுள் அவரவர் வசதிக்கேற்ப இயன்றவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

3. கோபுரத்தைக் கண்டவுடன் இரு கைகூப்பி வணங்க வேண்டும்.

4. நமச்சிவாய ஐந்தெழுத்தை மனதில் ஜபித்தவாறே செல்ல வேண்டும்.

5. தல விநாயகரைத் தரிசித்துக குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.

6. பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிச் செல்ல வேண்டும்.

7. உள்ளே மூலமூர்த்தியை வணங்கிச் சுற்றிலுமுள்ள உற்சவ மூர்த்திகளையும் சண்டேசுவரரையும், பிற சந்நிதிகளையும் வணங்க வேண்டும்.

8. திருநீற்றினை இருகையால் பணிவுடன் பெற்றுக்கீழே சிந்தாது அணிந்து கொள்ள வேண்டும்.

9. ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வர வேண்டும்.

10. தரிசிக்கும் காலத்தில் சந்நிதிகளுக்கு ஏற்ப துதிப் பாடல்களைச் சொல்லி வழிபடுதல் வேண்டும்.

11. வெளியே வந்து கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்க வேண்டும். (உள்ளே எந்த சந்நிதியிலும் தரையில் வீழ்ந்து வணங்க கூடாது)

12. சிறிது நேரம் அமர்ந்து அவரவர் நிலைக்கேற்ப தியானம் செய்து பின் அங்கிருந்து புறப்பட்டுச் சிவ சிந்தனையோடு செல்ல வேண்டும்


http://www.maalaimalar.com/2013/04/20150252/shiva-temple-worship-method.html