Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபி

    திரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபியிலிருந்து பத்மகோடி சீவன் வந்தன !

    இருபதுமந்தரத்தோளுமிலங்கைக்கிறைவன்சென்னி-
    யொருபதுமந்தரத்தேயறுத்தோனப்பனுந்திமுன்னா-
    டருபதுமந்தரவந்தனனான்முகன்றான்முதலா-
    வருபதுமந்தரமொத்தபல்சீவனும்வையமுமே



    பதவுரை : இருபது + மந்தர

    ஒரு + பதும் + அந்தரத்தே
    தரு + பதுமம் + தர (தாமரை)
    வரு + பதுமம் + தரம் (கோடி கோடி அளவு)


    இலங்கைக்கு இறைவன் இலங்கை அரசனான இராவணனுடைய
    இருபது மந்தரத் தோளும் மந்தர மலை போன்ற இருபது தோள்களையும்
    சென்னி ஒரு பத்தும் பத்து தலைகளையும்
    அந்தரத்தே அறுத்தோன் ஆகாயத்தில் அறுத்தவனுமான
    அப்பன் திருவேங்கடத்தானுடைய
    உந்தி முன் நாள் தரு பதுமம் தர திருநாபியில் பூத்த தாமரை முன்னாளில் படைக்க
    நான்முகன் தான் முதலா வரு பிரமன் முதலில் வருகிற
    பதுமம் தரம் ஒத்த கோடி கோடி அளவான
    பல் சீவனும் வையமும் வந்தன பல உயிர்களும் உலகங்களும் தோன்றின
    Last edited by sridharv1946; 29-07-13, 13:27.
Working...
X