திரு வேங்கடத்தந்தாதி 22/100 வேங்கட வேதியர்க்கு வையம் அடங்கலும் ஓர் துகள் !
வையமடங்கலுமோர்துகள்வாரியோர்திவலை
செய்யமடங்கல்சிறுபொறிமாருதம்சிற்றுயிர்ப்பு
துய்யமடங்கலிலாகாயம்தான்விரல்தோன்றும்வெளி
வெய்யமடங்கல்வடிவானவேங்கடவேதியற்கே
பதவுரை : வையம் + அடங்கலும்
செய்ய + மடங்கல் (நெருப்பு)
துய்ய + மடங்கல் (மடித்தல் )
வெய்ய +மடங்கல் (சிங்கம்)
வெய்ய மடங்கல் வடிவான கொடிய நர சிங்க வடிவானவனும்
வேங்கடதிருமலையில் உள்ளவனும்
வேதியற்கே வேதத்தில் உரைக்கப்படுபவனும் ஆனவனுக்கு
வையம் அடங்கலும் ஓர் துகள் உலகம் முழுதும் ஒரு தூசி ஆகும்
வாரி ஓர் திவலை நீர் முழுதும் ஒரு நீர்த் துளி ஆகும்
செய்ய மடங்கல் சிறு பொறி சிவந்த நெருப்பு ஒரு பொறி ஆகும்
மாருதம் சிற்றுயிர்ப்பு காற்று முழுதும் ஒரு சிறிய மூச்சு ஆகும்
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் தூய , மடிப்பு இல்லாத ஆகாயம் முழுதும்
விரல் தோன்றும் வெளி விரல்களிடையே உள்ள இடைவெளி ஆகும்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks