ஆதார சக்தி


Click image for larger version. 

Name:	Periva_Meenakshi.jpg 
Views:	5 
Size:	60.0 KB 
ID:	918

குழந்தைகளுக்கு தாய் ஸ்தன்யபானம் பண்ணுவிக்கிற மாதிரி லோகமாதா அத்தனை ஜீவராசிகளுக்கும், தாவரங்களுக்கும் கூட ஸூர்ய சந்திரர்களின் கிரண தாரைகளால் பாலூட்டுகிறாள். தாவரங்களுக்கும் ஜீவன் உண்டு. ஸூர்ய சந்திரர்களின் பிரகாசத்தால் உணவூட்டுகிறாள் என்றால் என்ன அர்த்தம்?

ஸூர்ய ரச்மியிலிருந்துதான் தாவரங்கள் ஜீவன் பெறுகின்றன என்பது தெரிந்த விஷயம். ஸூர்ய வெளிச்சமில்லாத இருட்டான இடத்தில் விதை போட்டால் செடி வராது. தாவரங்கள் நேராக தாங்களே ஜீவ ஸத்தை ஸூர்யனிடமிருந்து பெறுகின்றன.

அதோடு நிற்காமல் பரோபகாரமாக இப்படி நேரே ஸூர்யனிடமிருந்து ஜீவ ஸத்தை பெற முடியாத நமக்காகவும், தாவரங்களே நாம் அடுப்பு மூட்டி சமைக்கிற மாதிரி ஸூர்ய உஷ்ணத்தில் அந்த ஸூர்ய சக்தியையே நமக்கு ஜீர்ணமாகிற மாதிரி ரூபத்தில் சேமித்து வைத்துக்கொள்கின்றன. ஸோலார் குக்கர் காய்கறிகளையும், அரிசி முதலான தானியங்களையும் நாம் சாப்பிடும்போது, இந்த ஸூர்ய ப்ரஸாதமான சக்தி தான் நமக்கு உள்ள போய் ஜீவ ஸத்தை தருகிறது.

ஸூர்யனுடைய வெளிச்சத்திலே, ஓயாமல் ரிலீஸாகி கொண்டிருக்கும் சக்தி ஸகல அணுக்களுக்குள்ளேயும் வியாபித்தும், தாவர வர்க்கத்தில் மேலே சொன்னாற் போல போடோஸிந்தாஸிஸ் உண்டாக்கியுந்தான் ஜீவ ப்ரபஞ்சத்தை நடத்துகிறத என்று இப்போது ஸயன்ஸில் சொல்வதை எத்தனையோ யுகம் முந்தியே நம்மடைய வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. தாவரம் மாதிரியே நாமும் நேரே அந்த சக்தியை பெறுகிறதற்கு தான் காயத்ரி முதலான மந்த்ரங்களை கொடுத்திருக்கிறது.

(ஸயன்ஸுக்கும்) பல படி லேயே போய் தேஹ சக்தியோடு நிறுத்தி கொள்ளாமல் புத்தி, சக்தி, பாரமார்த்திகமான ஸாதனா சக்தி ஆகியவற்றையும் அவனிடமிருந்து க்ரஹித்து கொள்வதற்கு காயத்ரியை கொடுத்திருகிறது. அஞகே ஸவிதா, ஸாவித்ரி என்று நம்மை பெற்றெடுத்து வாழ்வு தருகிற ப்ரியமான தாயாகவே ஸூர்ய சக்தியை சொல்லியிருக்கிறது.

இந்த சக்தியும் ஆதி சக்தியான பராசக்தி என்ற மூலமான தாயாரின் அங்ந்தான் பாலூட்டும் அங்கந்தான் என்கிறார் ஆசார்யாள்.

-ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

Source: radha