திரு வேங்கடத்து அந்தாதி 24/100 ஆனையைக் காத்த அச்சுதனே ஆண்டவன் !
நாயகராத்திரியும்சிலதேவர்க்குநாணிலைகொல்
தூயகராத்திரிமூலமெனாமுனம்துத்திப்பணிப்-
பாயகராத்திரிமேனியம்மான்பைம்பொன்வேங்கடவன்
தீயகராத்திரிசக்கரத்தாற்கொன்றசீர்கண்டுமே
பதவுரை : நாயகராய் + திரியும்
தூய + கரா + திரி (யானை)
பாய் + அக + ராத்திரி
தீய + கரா +திரி (முதலை)
தூய கரா "மூலம்" எனா முனம் தூய்மையான யானை "ஆதி மூலமே" என்று கூப்பிடு முன்பே
துத்திப் பணிப் பாயக புள்ளிகளுள்ள படத்தை உடைய ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டவனும்
ராத்திரி மேனி அம்மான் கரிய மேனி கொண்ட தலைவனும்
பைம்பொன் வேங்கடவன் பசும் பொன் விளையும் வேங்கட மலையில் இருப்பவனும் திருமால்
தீய கரா கொடிய முதலையை
திரி சக்கரத்தால் சுழலும் சக்கரத்தால்
கொன்ற சீர் கண்டுமே கொன்ற சிறப்பைப் பார்த்தபிறகும்
நாயகராய்த் திரியும் கடவுளர் என்று திரிகின்ற
சில தேவர்க்கு வேறு சில தெய்வங்களுக்கு
நாண் இலை கொல் நாணம் இல்லையா ?
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks