Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 25/100 வேங்கடவன் அடிம&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 25/100 வேங்கடவன் அடிம&

    திரு வேங்கடத்து அந்தாதி 25/100 வேங்கடவன் அடிமை என்றால் வெங்கூற்றும் விலகும் !
    கண்டவனந்தரங்காலெரிநீர்வையங்காத்தவைமீண்-
    டுண்டவனனந்தரங்கத்துறைவானுயர்தந்தைதமர்
    விண்டவனந்தரமேலவன்வேங்கடமாலடிமை
    கொண்டவனந்தரத்தும்பேர்நினைக்கவும்கூற்றஞ்சுமே






    பதவுரை : கண்டவன் + அந்தரம் (ஆகாயம்)
    உண்டவன் + அம் + தரங்கத்து
    விண்டவன் + அந்த
    கொண்ட + அந்தரத்து (பிறகு)

    அந்தரம் கால் ஆகாயம் , காற்று
    எரி நீர் வையம் நெருப்பு , நீர் , நிலம் இவைகளை
    கண்டவன் படைத்தவனும் ,
    காத்து பாதுகாப்பவனும் ,
    மீண்டு உண்டவன் மறுபடியும் தன் வயிற்றில் வைப்பவனும் ,
    அம் தரங்கத்து உறைவான் அழகிய பாற்கடலில் பள்ளி கொண்டவனும்
    உயர் தந்தை தமர் விண்டவன் சிறந்த தந்தை மற்ற உறவினர்கள் இல்லாதவனும்
    அந்தர மேலவன் ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவனும் ஆகிய
    வேங்கட மால் திருவேங்கடத் திருமாலுக்கு
    அடிமை கொண்ட அந்தரத்து அடிமை செய்த பிறகு
    உம பேர் நினைக்கவும் உங்கள் பெயரை நினைப்பதற்குக் கூட
    கூற்று அஞ்சுமே எமன் பயப்படுவான் .
Working...
X