ஸ்தோத்திரங்கள் பற்றி விரிவான விளக்கம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதெய்வங்களை ஆராதிக்க அர்ச்சனைகள் அபிஷேகங்கள் ஹோமங்கள், பூஜைகள் என்று பல முறைகள் இருந்தாலும் அனைவரும் கடைபிடிக்கும் வகையில் மிகச்சுலபமாக வழி தெய்வங்களின் பெருமைகளை விளக்கிக் கூறும் ஸ்தோத்ரங்களை (பாடல்களை) பாராயணம் செய்வதுதான்.

உலகத்தில், ஒருவரை மிகைப்படுத்தி புகழ்ந்து பேசும் போது அவனை ஸ்தோத்திரம் செய்கிறார் என்கிறார்கள்.

ஆனால் குணிநிஷ்ட குணாபிதானம் ஸ்தோத்ரம் என்பதாக ஒருவரிடம் அமைந்திருக்கும் நல்ல / தீய குணங்களை எடுத்துக் கூறுவதே ஸ்தோத்திரம் என்றும் வடமொழிச் சொல்லின் பொருளாகும்.


தெய்வத்தின் குணங்களும் தெய்வ உருவங்களும் எப்படி அமைந்தாலும் ஸரி, அவைகளை உள்ளது உள்ளபடியே சோல்பவைதான் ஸ்தோத்திரங்கள், லம்போதர! தொங்கும் வயிறுடையவரே- என்று விநாயகரை ஸ்தோத்திரம் செதால் விநாயகர் கோபப்படமாட்டார், மட்டற்ற மகிழ்சியடைகிறார், ஆனால் இதையே ஒரு மனிதனைப் பார்த்து தொங்கும் (தொப்பை)வயிறுடையவரே என்று பலர் முன்னிலையில் சொன்னால் அவன் மகிழ்ச்சியடைய மாட்டான், மாறாக மிகுந்த கோபமடைவான்.


ஆகவேதான் மனிதன் உள்ளதை உள்ளபடிச் சோன்னால் கோபப்படுவான், தெய்வங்களோ உள்ளதை உள்ளபடிச் சொன்னால் மிகவும் மகிழ்ச்சியடையும் என்கிறது சாஸ்திரம்

தெய்வங்களின் ஸ்தோத்திரங்கள் அனைத்தும் தெய்வங்களின் உருவ அமைப்புகள் குணங்கள் லீலைகள் என்பதாக தெய்வங்களிடம் உள்ளதை, உள்ளபடியே சொல்வதாகவே அமைந்திருகின்றன ஸ்தோத்ரங்கள் ஸம்ஸ்க்ருதம்,தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பற்பல பாஷைகளில் அமைந்திருக்கலாம்,

ஸ்தோத்ரங்களை அதன் அர்த்தம் (பொருள்) தெரிந்துகொண்டு பாராயணம் செய்தால்தான் முழுப்பலனையும் அடைய முடியும் என்பதில்லை, பொருளே தெரியாவிட்டாலும் கூட வாய்விட்டு உரக்கச் சொல்வதாலேயே ஸ்தோத்திரத்தின் பலனை ஓரளவு அடைய முடியும்.


இது நெருப்பு, இதைத் தொட்டால் சுடும், என்னும் அறிவுடன் ஒருவன் நெருப்பைத் தொட்டாலும் நெருப்பு சுடும், அதைபோல் இது நெருப்பு, என்றும் அதைத் தொட்டால் நமக்குச் சுடும் என்றும் அறிவில்லாத சின்னஞ்சிறு குழந்தை (கவனக் குறைவாக) நெருப்பைத் தொட்டாலும் நெருப்பு சுடும், ஏனென்றால் நெருப்பின் தன்மை சுடுவது என்பது.


எவ்வாறு தன்னைத் தொடுபவர்களைச் சுடுவது என்பது நெருப்பின் தன்மையோ, அதைப்போலவே ஸ்தோத்திரங்களும் அதன் பொருளை உணர்ந்து சொல்பவர்களையும், பொருளே தெரியாமல் சொல்பவர்களையும் காப்பாற்றி முழு பலனையும் தரும் என்பது ஸ்தோத்திரங்களின் ஸ்வபாவம்.


ஆனாலும் ஸ்தோத்திரங்களின் பொருளை ஓரளவாவது தெரிந்து கொண்டு பாராயணம் செய்தால் முழுமையாகவும் விரைவாகவும் அதன் பலனை நாம் பெற முடியும், முதன் முதலாக நாம் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய ஆரம்பிக்கும்போது, அதன் பொருளை உணர்ந்து கொள்ளா விட்டாலும் கூட, போகப்போக கொஞ்சம் கொஞ்சமாக அதன் பொருளை நாம் தெரிந்து கொண்டு, பாராயணம் செய்ய முயற்சிக்க வேண்டும்,


ஸ்தோத்திர பாராயணம் என்பது தெய்வ நாமாக்களைச் சொல்வதுதான், ஆகவே ஸ்தோத்திரங்களை சோல்லும் போது மனதிற்குள் சொல்லாமல் வாய் விட்டு உரக்கச் சொல்வதாலும் முழு பலனையடைய முடியும்,


மிகப்பெரும் ஞானிகளாகவும், தபஸ்விகளாகவும் வாழ்ந்த மஹரிஷிகளும், ஆன்றோர்களும் பற்பல தெவங்களைக் குறித்து பற்பல ஸ்தோத்திரங்களை (பாடல்களை) இயற்றியிருக்கிறார்கள்.


இவைகள் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல, அருளும் நிறைந்தவை, இவைகளில் இதை இயற்றியவர்களின் தபஸ்ஸும், அருட் சக்தியும் கூட கண்ணுக்குப் புலப்படாமல் பொதிந்துள்ளன.


ஆகவேதான் மனிதன் செய்த ஸ்தோத்ரங்களைக் காட்டிலும் மஹரிஷிகளாலும், தபஸ்விகளாலும் ஆன்றோர்களாலும் இயற்றப்பட்ட ஸ்தோத்திரங்கள் மிகவும் சிறப்புத் தன்மை வாந்தவை என்கிறது சாஸ்திரம்,


வைதிகஸ்ரீ மூலம் முப்பத்து மூன்று ஸ்தோத்திரங்கள் அடங்கிய முதல் பாகம் முன்பு வெளியிடப்பட்டது, தற்போது இருப்பத்தைந்து ஸ்தோத்திரங்கள் அடங்கிய இரண்டாவது பாகம் வெளியிடப்படுகிறது.


ஆஸ்திகர்கள் அனைவரும் இந்த ஸ்தோத்ரங்களைப் படித்து அந்தந்த தெய்வ அருள் பெற்று
நீடுழி வாழ ஸ்ரீபகவானை ப்ரார்த்திக்கிறேன்


ஸ்ரீ மஹாகணே பஞ்சரத்னம் (ஸ்ரீ ஆதிசங்கரர்)

ஸ்ரீ விநாயகர் அகவல் (ஔவையார் இயற்றியது)

ஸ்ரீ ஸ்கந்த ப்ரோக்த விநாயக ஸ்தோத்திரம் (ஸ்ரீ முருகன் இயற்றியது)


ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்னம்


ஸ்ரீ ரவணபவ மந்திர ஷட்க ஸ்தோத்ரம்

ஸ்ரீஶிவ ஷடக்ஷர ஸ்தோத்திரம் (ஸ்ரீ ருத்ர யாமளத்திலுள்ளது)

ஸ்ரீ ஶிவாஷ்டக ஸ்தோத்திரம் (சிருங்கேரி ஸ்ரீ நரஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் இயற்றியது)

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்(மார்கண்டேயர்)

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்(ஸ்ரீ ஆதிசங்கரர்)


ஸ்ரீ லலிதா பஞ்சரத்ந ஸ்தோத்ரம் (ஸ்ரீ ஆதிசங்கரர்)


ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

ஸ்ரீ துர்கா ஸப்தஶ்லோகீ ஸ்துதி (ஸ்ரீ மார்கண்டேயர்)

ஸ்ரீ ரங்கநாதாஷ்டக ஸ்தோத்ரம் (ஸ்ரீ பராசர பட்டர்)


ஸ்ரீ விஷ்ணு பஞ்சாயுத ஸ்தோத்ரம்

ஸ்ரீ மந்திரராஜ பத (ந்ருஸிஹ்ம)ஸ்தோத்திரம்
ஸ்ரீ ந்ருஸிஹ்ம த்வாத்ரிம்ஶத் பீஜமாலா ஸ்தோத்ரம்
(ஸ்ரீ பரத்வாஜ மஹரிஷி இயற்றியது)


ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம் (ஸ்ரீ வாதிராஜ யதிகள்)


ஸ்ரீ ஹயக்ரீவகவச ஸ்தோத்ரம் (ப்ருஹ்மாஇயற்றியது)


ஸ்ரீ ஹயக்ரீவ பஞ்சர ஸ்தோத்ரம்

ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்தோத்ரம் (நாரத புராணம்)

ஸ்ரீ ஸூர்யாஷ்டக ஸ்தோத்ரம்(ஸ்ரீ ஸாம்பர்)

ஸ்ரீ ப்ருஹஸ்பதி (குரு) ஸ்தோத்திரம்
ஸ்ரீ மந்த்ரரூப ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம்
ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்ன ஸ்தோத்ரம்(ஸ்ரீ ஆதிசங்கரர்)

ஸ்ரீ ஹனுமத் ஸ்தோத்ரம் (ஸ்ரீ விபீஷணர்இயற்றியது)


Source:harikrishnamurthy