திரு வேங்கடத்து அந்தாதி 29/100 விஸ்வரூபனே ! கோவலூரில் சிறு இடத்தில் நின்றது எப்படி ?
பாதமராயுறை பாதாளத்தூடு பகிரண்டத்துப்
போதமராயிரம் பொன்முடி ஓங்கப்பொலிந்து நின்ற
நீதமரானவர்க்கு எவ்வாறு - வேங்கடம் நின்றருளும்
நாதமராமரம் எய்தாய் - முன் கோவல் நடந்ததுவே ?
பதவுரை : பாதம் + அரா + உறை
போது + அமர் + ஆயிரம்
நீ + தமர் + ஆனவருக்கு
நாத + மரா + மரம்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
வேங்கடம் நின்று அருளும் நாத ! வேங்கடத்தில் நின்றபடி அருளும் தலைவா !
மரா மரம் எய்தாய் ஏழு மரா மரங்களை அம்பு எய்து துளைத்தவனே !
பாதம் உன் திருவடிகள்
அரா உறை பாதாளத்து ஊடு பாம்புகள் வசிக்கும் பாதாள உலகிலும்
போது அமர் மலர்கள் சூடிய ,
ஆயிரம் பொன்முடிகள் உன் ஆயிரம் திரு முடிகள்
பகிரண்டத்து பொலிந்து நின்ற நீ அண்ட கோளத்துக்கு வெளியிலும் வளர்ந்து நின்ற நீ
முன் முற்காலத்தில்
தமர் ஆனவருக்கு அடியார்களான முதல் ஆழ்வார்களுக்கு காட்சி கொடுக்க
கோவல் நடந்தது எவ்வாறு திருக்கோவலூருக்கு நடந்து சென்றது எப்படி ?
Bookmarks