திரு வேங்கடத்து அந்தாதி 31/100 அற்புதனே ! உன் அடிமை ஆன பின்னும் நான் ஏன் அல்லல் பட வேண்டும் ?
அங்கமலைக்கும் வினையாலலமரவோவுனக்கும்
அங்கமலைக்குமடிமைப்பட்டேனரவானபரி-
அங்கமலைக்குடையாயக்கராவுடனன்றமர்செய்-
அங்கமலைக்குமுன்னின்றருள் வேங்கடத்தற்புதனே
பதவுரை: அங்கம் + அலைக்கும்
அம் + கமலைக்கும்
பரியங்க + மலை + குடை
அங்க + மலைக்கு
அரவு ஆன பரியங்க ஆதி சேஷன் ஆகிய கட்டிலை உடையவனே !
மலை குடையாய் கோவர்த்தன மலையை குடையாய்ப் பிடித்தவனே !
அக் கராவுடன் அந்த முதலையுடன்
அன்று அமர் செய் அக்காலத்தின் போர் செய்த
அங்க மலைக்கு மலை போன்ற அவயவங்கள் உடைய யானைக்கு
முன் சென்று அருள் எதிரில் சென்று நின்று பாதுகாத்து அருளிய
வேங்கடத்து அற்புதனே திரு வேங்கட மலையில் இருக்கும் அதிசயகுனங்களை உடையவனே !
அங்கம் அலைக்கும் உடலை வருத்துகின்ற
வினையால் அலமரவோ தீ வினையால் வருந்துவதற்காகவா
உனக்கும் அம் கமலைக்கும் உனக்கும் திருமகளுக்கும்
அடிமைப் பட்டேன் அடிமை ஆனேன் ?
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks