திரு வேங்கடத்து அந்தாதி 32/100 முத்தி சித்திக்க பர தத்துவன் தாள் பிடித்தேன் !
அற்பரதத்துமடவார்கலவியுமாங்கவர்கள்
நற்பரதத்துநடித்தலும்பாடலும்நச்சிநிற்பார்
நிற்பரதத்துக்கதிர்தோயும்வேங்கடம்நின்றருளும்
சிற்பரதத்துவந்தாளடைந்தேன்முத்திசித்திக்கவே
பதவுரை : அற்ப + ரதத்து (இன்பம்)
நல் + பரதத்து
நிற்ப + ரதத்து (தேர்)
சித் + பர + தத்துவம்
அற்ப ரதத்து மடவார் கலவியும் சிற்றின்பம் தரும் பெண்கள் சேர்க்கையையும் ,
ஆங்கு அவர்கள் அந்தப பென்கள்
நல் பரதத்து நடித்தலும் நல்ல பாரத நாட்டியம் ஆடுவதையும் ,
பாடலும் நச்சி நிற்பார் நிற்ப பாடுவதையும் விரும்பி நிற்பவர்கள் நிற்க
முத்தி சித்திக்கவே எனக்கு ஸ்ரீ வைகுண்டம் கிடைப்பதற்காக
ரத்தத்துக் கதிர் தோயும் தேரில் வரும் சூரியன் ஒளி வீசும்
வேங்கடம் நின்று அருளும் திரு வேங்கடமலையில் நின்றபடி கருணை செய்யும்
சிற் பர தத்துவன் ஞான மயமான பர தத்துவத்தின்
தாள் அடைந்தேன் திருவடிகளை நான் சரண் அடைந்தேன்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks