திரு வேங்கடத்து அந்தாதி 34/100 வேங்கடவன் அருளால் மட்டுமே பிறவிகள் தீரும் !
முறையிடத்தேசமிலங்கை செற்றான் முதுவேங்கடத்து-
ளிறையிடத்தேசங்குடையானினியென்னையாண்டிலனேல்
தறையிடத்தேயுழலெல்லாப்பிறவிதமக்குமள-
வுறையிடத்தேய்ந்திடுமிவ்வந்திவானத்துடுக்குலமே
பதவுரை : முறையிட + தேவர்
இறை + இடத்தே
தறை + இடத்தே
உறையிட + தேய்ந்திடும்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
தேசம் முறையிட உலகத்தவர் குறை கூறி வேண்ட
இலங்கை செற்றான் இலங்கையில் உள்ள் அரக்கர்களை அழித்தவனும் ,
இடத்தே சங்கு உடையான் இடக்கையில் சங்கத்தை ஏந்தியவனும் ,
முது வேங்கடத்துள் இறை பழமையான வேங்கட மலையில் இருக்கும் பெருமான்
இனி நான் சரண் அடைந்த பின்பும்
என்னை ஆண்டிலனேல் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால்
தறை இடத்தே உழல் பூமியில் மாறி மாறிப் பிறந்து திரியும்
எல்லாப் பிறவி தமக்கும் என்னுடைய பல பிறப்புகளையும்
அளவு உறை இட அளவிடுவதற்கு
இவ்வந்தி வானத்து உடுக்குலமே மாலை வானத்தில் உள்ள நக்ஷத்திரக் கூட்டம் எல்லாம்
தேய்ந்திடும் போதாமல் குறைந்து விடும்
Bookmarks