திரு வேங்கடத்து அந்தாதி 35/100 அனைவரும் வேங்கட வெற்பருக்கு ஆட்படுமின் !
உடுக்குமுடைக்குமுணவுக்குமேயுழல்வீரின்நீர்
எடுக்குமுடைக்குரும்புக்கென்செய்வீரிழிமும்மதமும்
மிடுகுமுடைக்குஞ்சரந்தொட்டவேங்கடவெற்பரண்ட
அடுக்குமுடைக்குமவர்க்காட்படுமினனைவருமே
பதவுரை : உடுக்கும் + உடைக்கும் (ஆடை)
எடுக்கும் + முடை + குரம்பு
மிடுகும் + உடை + குஞ்சரம்
அடுக்கும் + உடைக்கும் (அழிக்கும்)
உடுக்கும் உடைக்கும் (இந்த ஒரு உடலுக்காக )அணியும் ஆடையையும்
உணவுக்குமே உழல்வீர் உணவையும் தேடுவதற்கே அலைகின்றவர்களே !
இனி நீர் எடுக்கும் இனிமேல் நீங்கள் எடுக்கப்போகும்
முடைக் குரம்புக்கு முடை நாற்றமுள்ள உடல்களுக்கு
என் செய்வீர் என்ன செய்யப் போகிறீர்கள் ?
இழி மும்மதமும் மிடுகும் ஒழுகும் மூன்று மத நீர்களையும் ,வலிமையையும்
உடைக் குஞ்சரம் தொட்ட உடைய கஜேந்திரனை தன் கரங்களால் தொட்டு அருளியவரும்
வேங்கட வெற்பர் வேங்கட மலையில் இருப்பவரும்
அண்ட அடுக்கும் அண்ட கோளங்களின் வரிசைகளை
உடைக்கும் அவர்க்கு அழிப்பவருமான எம்பெருமானை
அனைவருமே ஆட்படுமின் நீங்கள் எல்லோரும் சரண் அடையுங்கள்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks