ஆக., 3 ஆடிப்பெருக்கு

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கிற்கு தனி ஸ்பெஷாலிட்டி.சனிக்கிழமை ஆடிப்பெருக்கு வருவது மிகவும் விசேஷம். காரணம், சனிப்பெருக்கு என்பதால் தான். நகை மற்றும் முக்கியப் பொருட்கள் வாங்க செல்பவர்கள், தொழில் துவங்குபவர்கள் சனிக்கிழமை ஆரம்பித்தால் அதை "சனிப்பெருக்கு' நாளாகக் கருதுவார்கள். ஆக, இவ்வாண்டு இரட்டைப் பெருக்குகள் ஒரேநாளில் இணைகின்றன.
சனீஸ்வரரே நம் முயற்சிகளுக்கு காரணகர்த்தா. முயற்சியுள்ள எந்தச்செயலும் வெற்றியடையும்.

என்னதான் சுபநாளைக் கணித்து தொழில், வியாபாரம் துவங்கினாலும், அதில் சோதனைகள் வராமலிருக்கிறதா என்ன! சனீஸ்வரர் சோதனைகளைத் தந்து நம்மைப் பக்குவப்படுத்துபவர். அவருக்குரிய நாளில், தொழிலைத் துவங்கும்போதோ, பொருளை வாங்கும்போதோ மகிழ்ச்சியடைந்து முயற்சிகளில் பெரும் வெற்றியைத் தருவார்.

ஆடிப்பெருக்கு நன்னாளும் நம் வாழ்வை முன்னேற்றும் நன்னாட்களில் ஒன்று. "பெருக்கு' என்றால் "பெருகுதல்' என்பது மட்டுமல்ல, "சுத்தம் செய்தல்' என்று பொருள். ஆடிப்பெருக்கை ஒட்டி, காவிரியாறு கரை புரண்டு ஓடும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தமும் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு விடும். ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மனித மனதிலும் ஆசை, பொறாமை, தீய எண்ணம், ஆணவம் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை பக்தி என்னும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை இந்த வெள்ளோட்டம் நமக்கு உணர்த்துகிறது. ஆடிப்பெருக்கன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு செல்வத்தை தரும் என்பது ஐதீகம். அதுபோல், மனமாசைக் கழுவி, உள்ளத்தில் பக்தியை நிரப்பி வைத்து விட்டால் அன்புச்செல்வம் பெருகி உலகமே அமைதி வெள்ளத்தில் மூழ்கும்.


புதுமணத்தம்பதிகள் ஒற்றுமையாக வாழ இந்த விழா வழிவகுக்கிறது. காவிரிக்கரையோர ஊர்களில் புதிதாக திருமணமான மணமக்கள் காவரியில் நீராடி ஒற்றுமையாக வாழ பிரார்த்தனை செய்வர். பெண்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், விவசாயிகள் தங்கள் விளைநிலங்கள் பெருஞ்செழிப்பைத் தரவேண்டும் எனவும் காவிரியை வேண்டும் நன்னாள் இது.

அது மட்டுமா! இந்த திருவிழா ஓர் அற்புதத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி, தன் பக்தையான ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்க, அவளது தாயின் வடிவில் பெருகியோடும் காவிரியைக் கடந்து சென்றார். இவ்வாறு அற்புதம் நிகழ்த்தி, அந்தப் பெண்ணுக்கு தாயும் ஆனதால் "தாயும்ஆன சுவாமி' என பெயர் பெற்றார். ஆடிப்பெருக்கன்று தாயுமானவரை வணங்கினால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கு நன்னாள் சகல வளங்களையும் நமக்கு தரும் என்பதில் சந்தேகமில்லை.

Source:harikrishnamurthy