திரு வேங்கடத்து அந்தாதி 38/100 அறம் பொருள் இன்பம் வீடு அனைத்தும் அளிப்பவன் அச்சுதனே !புண்ணி யங்காமம்பொருள்வீடுபூதலத்தோர்க்களிப்பான்
எண்ணி யங்காமந்திருத்தாதைநிற்குகிடமென்பரால்
நண்ணி யங்காமன்பரைக்கலங்காத்திருநாட்டிருத்தி
மண்ணி யங்காமற்பிறப்பறுத்தாளும்வடமலையே

பதவுரை :புண்ணியம் + காமம்
எண்ணி + அம் +காமன்
நண்ணி + அங்கு + ஆம்
மண் + இயங்காமல்

நண்ணி அங்கு ஆம் அன்பரை விரும்பி தன்னிடம் வரும் பக்தர்களை
கலங்காத் திருநாட்டு இருத்தி வருத்தம் இல்லாத வைகுண்டத்தில் வைத்து
மண் இயங்காமல் பூமியில் உழலாமல்
பிறப்பு அறுத்து பிறப்புகளை ஒழித்து
ஆளும் வடமலையே ஆட்கொள்ளும் வேங்கட மலையை
அம காமன் திருத்தாதை அழகிய மன்மதனுடைய தந்தையான திருமால்
புண்ணியம் பொருள் காமம் வீடு அறம் பொருள் இன்பம் வீடு இவைகளை
பூதலத்தோர்க்கு அளிப்பான் பூமியில் உள்ளவர்களுக்கு கொடுப்பவன்
நிற்கும் இடம் என்பர் எழுந்தருளி இருக்கும் இடம் என்று கூறுவார்கள்