Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 40/100 அத்தை மகன் தேரி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 40/100 அத்தை மகன் தேரி

    திரு வேங்கடத்து அந்தாதி 40/100 அத்தை மகன் தேரில் நத்தை குறித்தான் அடிகளைப் பற்றுங்கள் !

    மலங்கத்தனத்தையுழன்றீட்டிமங்கையர்மார்பில்வட-
    மலங்கத்தனத்தையணையநிற்பீரப்பன்வேங்கடத்து-
    ளிலங்கத்தனத்தைமகன்றேரினின்றெதிரேற்றமன்னர்
    கலங்கத்தனத்தைக்குறித்தானைமேவக்கருதுமினே






    பதவுரை : மலங்க + தனத்தை (செல்வத்தை )
    வடம் + அலங்க + (கொங்கைகளை )
    இலங்கு + அத்தன் + அத்தை
    கலங்க + தன் + நத்தை

    மலங்க
    மனம் கலங்க

    தனத்தை உழன்று ஈட்டி செல்வத்தை அலைந்து சேர்த்து
    மங்கையர் மார்பில் வடம் அலங்க பெண்கள் மார்பில் மாலைகள் புரளும்படி
    தனத்தை அணைய நிற்பீர் கொங்கைகளைத் தழுவி நிற்பவர்களே !
    அப்பன் ஸ்வாமியும்
    வேங்கடத்துள் இலங்கு அத்தன் வேங்கடமலையில் இருக்கும் தலைவனும்
    அத்தை மகன் தேரில் நின்று
    அத்தை குந்தி மகன் அர்ஜுனன் தேரில் சாரதியாக நின்று
    எதிர் ஏற்ற மன்னர் கலங்க எதிரில் வந்த பகைவர்களான அரசர்கள் நடுங்கும்படியாக
    தன் நத்தை குறித்தானை தனது பாஞ்ச ஜன்யத்தை ஊதி முழக்கியவனுமான எம்பெருமானை
    மேவ கருதுமின் சரண் அடைய நினையுங்கள் !

    Last edited by sridharv1946; 03-08-13, 22:16.
Working...
X