திரு வேங்கடத்து அந்தாதி 42/100ஆனையைக் காத்த அச்சுதனுக்கு ஒப்பார் இல்லை !
உன்னைக்கரியமிடற்றனயன்முதலும்பரெல்லாம்
பொன்னைக்கரியொத்தபோதுமொவ்வார்புகழ்க்கோசலையா-
மன்னைக்கரியமுத்தேயப்பனேயுன்னையன்றிப்பின்னை
முன்னைக்கரியளித்தாய்க்குவமானமொழியில்லையே
பதவுரை : உன்னை + கரிய
பொன்னை + கரி
அன்னைக்கு + அரிய
முன்னை + கரி
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
புகழ்க் கோசலையாம் அன்னைக்கு கீர்த்தியுடைய கௌசல்யை அன்னைக்கு அரிய முத்தே அருமையான முத்து போன்றவனே !
அப்பனே வேங்கடவா !
கரி பொன்னை ஒத்த போதும் கரி தங்கத்துக்கு ஒப்பு ஆனாலும் (ஆகாது )
கரிய மிடற்றன் அயன் முதல் நீலகண்டன் ஆன சிவன் , பிரமன் முதலிய
உம்பர் எல்லாம் உன்னை ஒவ்வார் தேவர்கள் எல்லோரும் உனக்கு ஒப்பாக மாட்டார்கள்
முன்னை கரி அளித்தாய்க்கு முன்பு கஜேந்திரனைப் பாதுகாத்த உனக்கு
உன்னை அன்றி பின்னை உன்னை விட்டால் பிறகு
உவமானம் மொழி இல்லை வேறு ஒப்பவர் இல்லை
Bookmarks