திரு வேங்கடத்து அந்தாதி 44/100 வேங்கடவனைக் கண்டு விரோதிகள் ஓடுவர் !
கைத்தனுமோடிசைவெற்பெனக்காணவெவ்வாணனென்னு-
மத்தனுமோடிகல்செய்வனென்றேவந்துவையுறுவே-
லத்தனுமோடியுமகியுமோடவென்னப்பனுக்குப்-
பித்தனுமோடினனங்கத்துத்தானென்றும்பெண்ணனென்றே
பதவுரை : கை + தனு + மோடி
மத்தன் + நுமோடு
அத்தனும் + மோடியும்
பித்தனும் + ஓடி
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
கை தனு கையில் உள்ள வில்
மோடு இசை வெற்பு எனக் காண உயர்ந்த மலை போலத் தோன்ற
வெவ்வாணன் என்னும் மத்தன் கொடிய வாணாசுரன் எனும் உன்மத்தன்
நுமோடு இகல் செய்வன் என்றே உம்முடன் போர் செய்வேன் என்று வந்தபோது
என் அப்பனுக்கு திரு வேங்கடமுடையான் ஆன உமக்கு முன்
உறுவேல் அத்தனும் கூரிய வேல் கொண்ட முருகனும் ,
மோடியும் அங்கியும் ஓட துர்கையும் , அக்கினியும் தோற்று ஓட
பித்தனும் பித்தன் ஆகிய சிவனும்
அங்கத்து என்றும் தன் உடலில்என்றும்
தான் பெண்ணன் என்று ஓடினன் தான் பெண்ணை உடையவன் என்று கூறி ஓடினான்
Bookmarks