திரு வேங்கடத்து அந்தாதி 45/100 அகலிகை காத்தவனே ! அந்திம காலத்தில் அருள்வாய் !
பெண்ணாக்குவிக்கச்சிலைமேலொருதுகள்பெய்தபொற்றா-
ளண்ணாக்குவிக்கலெழும்போதெனக்கருள்வாய் பழிப்பு
நண்ணாக்குவிக்கச்சிளமுலைப்பூமகணாயகனே
யெண்ணாக்குவிக்கக்குழலூதும்வேங்கடத்தென்கண்ணனே
பதவுரை : பெண் + ஆக்குவிக்க
அண்ணாக்கு + விக்கல்
நண்ணா + குவி + கச்சு
எண் + ஆ + குவிக்க
பழிப்பு நண்ணா நிந்தனைகளை அடையாத
குவி கச்சு இள முலை குவிந்த கச்சு அணிந்த இளமையான தனங்களை உடைய
பூ மகள் நாயகனே தாமரையில் இருக்கும் மகா லக்ஷ்மியின் கணவனே !
எண் ஆ குவிக்க எண்ணிக்கையற்ற பசுக்களை ஒன்று சேர்க்க
குழல் ஊதும் புல்லாங்குழலை ஊதிய
வேங்கடத்து என் கண்ணனே வேங்கட மலையில் இருக்கும் கண்ணபிரானே !
பெண் ஆக்குவிக்க ஒரு கல்லை அஹல்யையாக மாற்ற
சிலை மேல் ஒரு துகள் பெய்த கல்லின் மேல் ஒரு துகளை விட்ட
பொன் தாள் அழகிய திருவடிகளை
அண்ணாக்கு விக்கல் எழும்போது கடைசி காலத்தில் உள் நாக்கிலிருந்து விக்கல் வரும்போது
எனக்கு அருள்வாய் அடியேனுக்கு அருள் புரிவாய் !
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks