திரு வேங்கடத்து அந்தாதி 46/100 வேங்கடவனை வணங்கினோர்க்கு வைகுந்தம் வசமே !
கண்ணனையேநெஞ்சுருகேனவைகொண்டேன்கண்ணுநெஞ்சும்
புண்ணனையேன்கல்லனையேநென்றாலும்பொற்பூங்கமலத்-
தண்ணனையேநல்லசார்வாகவேங்கடஞ்சார்ந்துமணி-
வண்ணனையேயடைந்தேற்கில்லையோதொல்லைவைகுந்தமே
பதவுரை : கண் + நனையேன்
புண் + அனையேன்
தண் + அனையே
மணி + வண்ணனையே
கண் நனையேன் பக்தியால் கண் நீரால் நனையவில்லை
நெஞ்சு உருகேன் மனம் உருகவில்லை
அவை கொண்டு அதனால்
என் கண்ணும் நெஞ்சும் எனது கண்களும் மனதும்
புண் அனையேன் புண்களுக்கு ஒப்பானவை ஆகிவிட்டன
கல் அனையேன் கல்லுக்கு ஒப்பானவை ஆகி விட்டன
என்றாலும் அப்படி ஆனாலும்
பொன் பூங் கமலம் அழகிய செந்தாமரையில் இருக்கும்
தண் அனையே குளிர்ந்த தாயான மகா லக்ஷ்மியையே
நல்ல சார்வு ஆக நல்ல துணையாகக் கொண்டு
வேங்கடம் சார்ந்து திரு வேங்கட மலையை அடைந்து
மணி வண்ணனையெ அடைந்தேற்கு நீல நிறமுடைய வேங்கடவனை சரண் புகுந்த எனக்கு
தொல்லை வைகுந்தம் இல்லையோ பழமையான பரமதம் கிடைக்காமல் போகுமா ?
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks