திரு வேங்கடத்து அந்தாதி 47/100 குந்தம் ஒசித்தவனே ! முகுந்தா ! வைகுந்தத்துள் என்னை வை !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

வைகுந்தமாயவிழிமாதர்வேட்கையைமாற்றியென்னை
வைகுந்தமாயவினைநீக்கியமுத்தர்மாட்டிருத்தி
வைகுந்தமாயவொசித்தாய்வடதிருவேங்கடவா
வைகுந்தமாயவனேமாசிலாதவென்மாமணியே

பதவுரை : வை + குந்தம் + ஆய (வேல் போன்ற )
வைகும் + தம் + ஆய {தொகுதி )
வை + குந்தம் + மாய (குருந்தமரம் )
வைகுந்த + மாயவனே

குந்தம் மாய ஒசித்தாய் குருந்த மரம் அழியும்படி முறித்தாய் !
வட திருவேங்கடவா வடக்கு திருவேங்கடமலையில் உள்ளவனே !
வைகுந்த மாயவனே ஸ்ரீ வைகுண்டத்துக்கு தலைவனே !
மாசு இலாத என் மா மணியே குற்றம் இல்லாத பெரிய மாணிக்கம் போன்றவனே !வை குந்தம் ஆய விழி மாதர் கூரிய வேல் போன்ற கண்களை உடைய பெண்களிடம்
வேட்கையை மாற்றி என்னை ஆசையை ஒழித்து என்னை
வைக்கும் தம் ஆய வினை நீக்கிய தங்கிய தமது சேர்ப்பு ஆன கருமத்தை போக்கிய
முத்தர் மாட்டு முக்தர்களில் ஒருவனாக
இருத்தி வை இருக்கச் செய்வாய் !