பல்லக்கைச் சுமந்த பேறு
====================
இராமநாதன் செட்டியாரை காணவில்லையே என்று பெரியவா மடத்தின் அதிகாரியிடம் வினவினார்கள்.

அவர், சுற்றுமுற்றும் தேடினார், ஆனால் செட்டியார், கண்ணில் தென்படவில்லை.
இராமநாதன் செட்டியார் அமராவதிப்புதூரைச் சேர்ந்தவர். சிவபக்திச் செல்வர். நாள்தோறும் சிவபூஜை செய்து நியமத்தோடு வாழ்ந்து வருபவர். தமிழில் நிறைந்த புலமை பெற்றவர்.

கடியாப்பட்டி என்ற ஊருக்கு பெரியவா விஜயம் செய்தபோது, செட்டியார், பூஜையைக் கண்டு மகிழவும் பெரியவாளை தரிசிக்கவும் கடியாப்பட்டிக்கு வந்தார்.


பெரியவாளை தரிசித்து உரையாடி மழிந்தார். செட்டியாரின் பக்தியை பெரியவா உணர்ந்து கொண்டார். பெரிவாளை தரிசிப்பதும், அவருடன் உரையாடுவதிலும் தம்மை தாமே மறந்தார்.

பெரியவா மேல இருந்த பக்தி மீது பாக்கள் இயற்றி பாடிக் காட்டினார்.

கடியாப்பட்டியிலிருந்து பெரீவா பட்டினப் பிரவேசமாகக் கிளம்பியது அவருடன் ஊர் மக்கள் திரண்டு உடண் வந்தார்கள். அப்போதுதான் பெரியவா அவரை பற்றி வினவினார்கள்.

பெரீவா அவரை பற்றி வினவியதை அறிந்ததும் இராமநாதன் செட்டியார் அவரருகே வந்து நின்றார்.
தங்களோடு தான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார் செட்டியார்.

என் கண்ணில படவில்லையே எனறார் பெரியவா

தங்களைச் சுமந்து வரும் பேற்றை இன்று நான் பெற்றேன். பல்லக்கை சுமந்த பாக்யம் கிடைத்தது என்று பக்தி மீதூர செட்டியார் மொழிந்தார்.

அவருடைய பக்தியை கண்டு பெரியவா பரிவு ததும்பும் கண்களினால் பார்த்து, ஆசி கூறினார்கள்.
பக்திக்கு பரமனே அடி பணிவான் !! நம் உம்மாச்சி தாத்தாவும் அந்த பக்திக்கு அருள் பாலித்தார்கள்.


Source:Mannargudi Sitaraman SrinivasanDear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends