Announcement

Collapse
No announcement yet.

காசியில் செய்ய வேண்டிய புண்ணிய காரியங்க&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காசியில் செய்ய வேண்டிய புண்ணிய காரியங்க&

    காசியில் செய்ய வேண்டிய புண்ணிய காரியங்கள்

    காசியில் செய்ய வேண்டிய புண்ணிய காரியங்கள் வருமாறு:-

    * காசி யாத்திரை செல்லும்போது ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். காசியில் தானம் செய்தால் நல்ல கதியை அடைய முடியும்.

    * காசியில் விரதம் இருப்பவர்களுக்கு உணவு அளித்து பூஜிக்க வேண்டும். இதனால் சவுதராமணி யாகம் செய்த பலனை அடைகின்றனர்.

    * காசியில் தானம் செய்த பிறகு சிவபக்தியுடன் தானம் செய்து ஒரு நாள் விரதம் இருந்தால், நூறு வருடங்கள் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

    * காசியில் சிவபெருமானை பூஜித்து ஸ்தோத்திரம் செய்பவர்கள் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர்.

    * மற்ற புண்ணிய தலங்களில் பலருக்கு அன்னம் அளித்த பலன், காசியில் ஒருவருக்கு அன்னம் அளித்தாலே கிடைத்துவிடும்.

    * நன்றாக பால் கறக்கக்கூடிய பசுக்களை காசியில் தானம் செய்தால், அவனுடைய ஏழு தலைமுறைகள் பலன் அடையும்.

    source:http://cinema.maalaimalar.com/2012/08/29154421/kashi-doing-worship.html
Working...
X