Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 49/100 வேங்கடவா ! நின் ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 49/100 வேங்கடவா ! நின் ī

    திரு வேங்கடத்து அந்தாதி 49/100 வேங்கடவா ! நின் மலர் அடி தீங்கு அரிக்க கானகம் சென்றது !

    ஆதரிக்கப்பட்டவாணுதன்மங்கையரங்கைமலர்
    மீதரிக்கப்பட்டநின்னடியேவெள்ளருவிசெம்பொன்
    போதரிக்கப்பட்டஞ்சூழ்வேங்கடவெற்பபோரரக்கர்
    தீதரிக்கப்பட்டகானகத்தூடன்றுசென்றதுவே


    பதவுரை : ஆதரிக்க + பட்ட (பட்டத்து )
    மீ + தரிக்கப்பட்ட
    போது + அரிக்க + பட்டம் (கொண்டு வர )
    தீது + அரிக்க + பட்ட (அழிக்க )

    வெள் அருவி வெண்ணிறமான நீர் அருவிகள்
    செம் பொன் சிவந்த பொன்னையும்
    போது மலர்களையும்
    அரிக்க அரித்துக் கொண்டு வர
    பட்டம் சூழ் நீர் நிலைகள் சூழ்ந்த
    வேங்கட வெற்ப வேங்கட மலையில் இருப்பவனே !
    பட்ட வாள் நுதல் பொற்பட்டம் அணிந்த பிரகாசமான நெற்றியை உடைய
    மங்கையர் ஆதரிக்க பட்டத்து மனைவியர் அன்பு செய்யவும்
    அம் கை மலர் மீ தரிக்கப் பட்ட அழகிய தாமரை போன்ற கைகள் மீது தாங்கப்பட்ட
    நின் அடியே உனது திருவடிகளே
    அன்று ராமாவதாரத்தில்
    போர் அரக்கர் தீது அரிக்க போர் செய்த அரக்கர்களின் தீங்கை அழிப்பதற்கு
    பட்ட கானகத்தூடு சென்றது உலர்ந்த காட்டில் நடந்தது !

    Last edited by sridharv1946; 12-08-13, 19:32.
Working...
X