திரு வேங்கடத்து அந்தாதி 51/100 தொண்டர் அடிப் பொடியால் காப்பு இடும் !


உண்டமருந்துகைக்குமன்னைமீர் மதனோரைந்தம்புங்-
கொண்டமருந்துகைக்குங்குருகாமுனங்கொவ்வைச்செவ்வா-
யண்டமருந்துகைக்குந்திறந்தானப்பன்போல்பரியு-
மெண்டமருந்துகைக்கும்பொடிகாப்பிடுமின்றெனக்கே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை : உண்ட + மருந்து + கைக்கும்
கொண்டு + அமர் + உந்துகைக்கும்
அண்டம் + அருந்துகைக்கும்
எண் + தமரும் + துகைக்கும்


அன்னை மீர் தாய் மார்களே !
உண்ட மருந்து கைக்கும் சாப்பிட்ட அமிர்தமும் எனக்கு கசக்கும் .
மதன் ஓர் ஐந்து அம்பும் கொண்டு மன்மதன் தனது ஐந்து அம்புகளையும் கொண்டு
அமர் உந்துகைக்கு குறுகா முன்னம் போர் செய்வதற்கு நெருங்குவதன் முன்னே
அண்டம் அருந்துகைக்குமஅண்ட கோளங்களை விழுங்குவதற்காக
கொவ்வை செவ்வாய் திறந்தான் கோவைப்பழம் போல் சிவந்த வாயைத் திறந்த
அப்பன் போல் பரியும் வேங்கடவன் போல் அன்பு கொள்ளும்
எண் தமரும் மதிக்கத் தக்க அடியார்கள்
துகைக்கும் பொடி மிதிக்கும் திருவடித் துகள்களை
இன்று எனக்கே இப்பொழுதே எனக்கு
காப்பு இடும் காப்பாக இடுங்கள்