திரு வேங்கடத்து அந்தாதி 57/100 தான் அவனாக நினத்தாற்கு என்றும் தான் அவனே !

தானவனாகமருப்பொசித்தானுக்குத்தானுகந்த
தானவனாகமுடியினின்றானுக்குத்தாள்வணங்காத்-
தானவனாகமிடந்தானுக்காளென்றுதன்னையெண்ணாத்-
தானவனாகநினைந்திருப்பாற்கென்றுந்தானவனே

பதவுரை : தான + அல் + நாக (மதம் கொண்ட கரிய யானை)
ஆன + வல் + நாக (வலிய மலை )
தானவன் + ஆகம்
தான் + அவன் + ஆக


தான அல் நாக மதம் கொண்ட கரிய குவயாபீடம் என்ற யானையின்
மருப்பு ஒசித்தானுக்கு தந்தங்களை ஓடித்தவனும்
தான் உகந்தது ஆன தான் விரும்பிய இடமான
வல் நாக முடியில் வலிமை உள்ள திருவேங்கட மலையின் சிகரத்தில்
நின்றானுக்கு நின்ற கோலத்தில் இருப்பவனும்
தாள் வணங்கா அவனது திருவடிகளை வணங்காத
தானவன் ஆகம் ஹிரண்யனுடைய மார்பை
இடந்தானுக்கு பிளந்தவனான எம்பெருமானுக்கு
ஆள் என்று தன்னை எண்ணா அடிமை என்று தன்னை நினையாமல்
தான் அவன் ஆக தானே பரமாத்மாஎன்று நினைப்பவருக்கு
என்றும் தான் அவனே எப்பொழுதும் அப்பெருமான் பயன் இல்லாதவன்Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends