சிந்திக்க -21.
மஞ்சள் என்றால் என்ன? என்று இந்தகாலக்குழந்தைகளிடம் கேட்டால் அது ஒரு கலர் என்பார்கள். சில புத்திசாலி குழந்தைகளாக இருந்தால் டர்மரிக் ( TURMERIC )என்று சொல்லும் அந்த அளவில்தான் மஞ்சள்மகி-மையைப் பற்றித் தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் பெரியவர்களே. இன்றையப்பெண்கள் மஞ்சள் கிழங்கை பயன் படுத்து-வதே இல்லை. ஏனென்றால் சமையலுக்கும், வெற்றிலைபாக்குடன் வைத்துக்கொடுப்பதற்கும் ப்ளாஸ்டிக் கவர்களில் கிடைத்துவிடுகின்றன.மஞ்சளை உடலில் பூசிக்கொள்ளும் வழக்கம் அறவே மறைந்து விட்-டது. மஞ்சள் ஒரு கிரிமிநாஸினி. அதைப்பெண்கள் உடலில் பூசிக்-கொள்வதால் சரும வியாதிகள் வரவே வராது. அதைப்பாதங்களில் பூசிக்கொள்வதால் பித்த வெடிப்புகள் தொன்றாது. பெண்கள் உடலில் மஞ்சள் பூசிக்கொண்டால் அவர்கள் தனிபொலிவிடன் விளங்குவார்கள். பார்க்க லக்ஷ்மிகரமாக இருக்கும். ஆனால் இன்று பெண்கள் டர்மரிக் க்ரீம் என்று கண்டதையும் வாங்கிப் பூசிக்கொள்கிறார்கள். மேலும் மஞ்சளை உள்ளுக்கு சாப்பிட்டால் கேன்ஸர் வியாதி வராது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறாரகள் ஆகவேதான் நம் பெரி-யோர்கள் சமையலில் மஞ்சளை உபயோகப்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்போலும். இளம் மஞ்சள் கிழங்கைவாங்கி ( பொங்கல் கழிந்ததும் கிடைக்கும்.)அலம்பி தோல்சீவி மாங்காய்த்தண்டுகளுடன் ஊர்காயாகப் பயன்படுத்துவது நல்லது.
சிந்தியுங்கள்.
courtesy:Poigaiadiyan

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends