Announcement

Collapse
No announcement yet.

Manual - turmeric

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Manual - turmeric

    சிந்திக்க -21.
    “ மஞ்சள் “ என்றால் என்ன? என்று இந்தகாலக்குழந்தைகளிடம் கேட்டால் அது ஒரு கலர் என்பார்கள். சில புத்திசாலி குழந்தைகளாக இருந்தால் டர்மரிக் ( TURMERIC )என்று சொல்லும் அந்த அளவில்தான் மஞ்சள்மகி-மையைப் பற்றித் தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் பெரியவர்களே. இன்றையப்பெண்கள் மஞ்சள் கிழங்கை பயன் படுத்து-வதே இல்லை. ஏனென்றால் சமையலுக்கும், வெற்றிலைபாக்குடன் வைத்துக்கொடுப்பதற்கும் ப்ளாஸ்டிக் கவர்களில் கிடைத்துவிடுகின்றன.மஞ்சளை உடலில் பூசிக்கொள்ளும் வழக்கம் அறவே மறைந்து விட்-டது. மஞ்சள் ஒரு கிரிமிநாஸினி. அதைப்பெண்கள் உடலில் பூசிக்-கொள்வதால் சரும வியாதிகள் வரவே வராது. அதைப்பாதங்களில் பூசிக்கொள்வதால் பித்த வெடிப்புகள் தொன்றாது. பெண்கள் உடலில் மஞ்சள் பூசிக்கொண்டால் அவர்கள் தனிபொலிவிடன் விளங்குவார்கள். பார்க்க லக்ஷ்மிகரமாக இருக்கும். ஆனால் இன்று பெண்கள் “ டர்மரிக் க்ரீம் “ என்று கண்டதையும் வாங்கிப் பூசிக்கொள்கிறார்கள். மேலும் மஞ்சளை உள்ளுக்கு சாப்பிட்டால் கேன்ஸர் வியாதி வராது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறாரகள் ஆகவேதான் நம் பெரி-யோர்கள் சமையலில் மஞ்சளை உபயோகப்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்போலும். இளம் மஞ்சள் கிழங்கைவாங்கி ( பொங்கல் கழிந்ததும் கிடைக்கும்.)அலம்பி தோல்சீவி மாங்காய்த்தண்டுகளுடன் ஊர்காயாகப் பயன்படுத்துவது நல்லது.
    சிந்தியுங்கள்.
    courtesy:Poigaiadiyan
Working...
X