திரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லால் சரண் இல்லை சரண்யனே !

மரணங்கடக்குஞ்சரம்நீங்கவாழ்வித்துவல்லரக்கர்
முரணங்கடக்குஞ்சர வேங்கடவ கண்மூடியந்தக்-
கரணங்கடக்குஞ்சரமத்து நீதருகைக்கெனக்குன்
சரணங்கடக்குஞ்சரண் வேறில்லை தந்துதாங்கிக்கொள்ளேபதவுரை : மரணம் + கட + குஞ்சரம்
முரண் + அங்கு + அடக்கும் + சர
அந்தக்கரணம் + கடக்கும் + சரமத்து
சரணம் + கடக்கும் + சரண்
கடக் குஞ்சரம் மதமுள்ள கஜேந்திரன் என்னும் யானை
மரணம் நீங்க வாழ்வித்து முதலையால் இறப்பதைத் தடுத்து , உயிர் கொடுத்து
வல் அரக்கர் முரண் வலிய ராக்கதர்களுடைய பலத்தை
அங்கு அடக்கும் சர ஒடுக்கும் அம்புகளுடைய ராமனே !
வேங்கடவா திரு வேங்கடமுடையானே !
கண் மூடி கண்கள் இருண்டு
அந்தக்கரணம் கடக்கும் சரமத்து மனம் அழியும் எனது அந்திம காலத்தில்
நீ எனக்கு தருகைக்கு நீ எனக்கு அளிப்பதற்கு
சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை உன் திருவடி அன்றி வேறு புகல் இல்லை .
தந்து தாங்கிக் கொள்ளே சரண் அளித்து என்னை ஏற்றுக் கொள் !Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends