Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லா

    திரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லால் சரண் இல்லை சரண்யனே !

    மரணங்கடக்குஞ்சரம்நீங்கவாழ்வித்துவல்லரக்கர்
    முரணங்கடக்குஞ்சர வேங்கடவ கண்மூடியந்தக்-
    கரணங்கடக்குஞ்சரமத்து நீதருகைக்கெனக்குன்
    சரணங்கடக்குஞ்சரண் வேறில்லை தந்துதாங்கிக்கொள்ளே



    பதவுரை : மரணம் + கட + குஞ்சரம்
    முரண் + அங்கு + அடக்கும் + சர
    அந்தக்கரணம் + கடக்கும் + சரமத்து
    சரணம் + கடக்கும் + சரண்
    கடக் குஞ்சரம் மதமுள்ள கஜேந்திரன் என்னும் யானை
    மரணம் நீங்க வாழ்வித்து முதலையால் இறப்பதைத் தடுத்து , உயிர் கொடுத்து
    வல் அரக்கர் முரண் வலிய ராக்கதர்களுடைய பலத்தை
    அங்கு அடக்கும் சர ஒடுக்கும் அம்புகளுடைய ராமனே !
    வேங்கடவா திரு வேங்கடமுடையானே !
    கண் மூடி கண்கள் இருண்டு
    அந்தக்கரணம் கடக்கும் சரமத்து மனம் அழியும் எனது அந்திம காலத்தில்
    நீ எனக்கு தருகைக்கு நீ எனக்கு அளிப்பதற்கு
    சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை உன் திருவடி அன்றி வேறு புகல் இல்லை .
    தந்து தாங்கிக் கொள்ளே சரண் அளித்து என்னை ஏற்றுக் கொள் !

Working...
X