திரு வேங்கடத்து அந்தாதி 65/100
அண்ட பூரணனே ! அந்திம காலத்தில் அடியேனுக்கு அருள் !


சீவார்கழலையிரண்டையுஞ்செப்பென்று தீங்குளவி-
னாவார்கழலைப்பயில்செங்கையார்னல்பேணுமைவ-
ராவார்கழலையிரண்டாமவத்தையினன்றெனக்குன்
பூவார்கழலையருளப்பனேயண்டபூரணனே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை : சீ + வார் + கழலை (கட்டி)
வினாவார் + கழல் (கழற்சிக்காய் )
ஆவார் + கழல் + ஐ (நழுவும் )
பூ + ஆர் + கழலை

அப்பனே அண்ட பூரணனே வேங்கடவா ! உலகம் முழுதும் நிறைந்தவனே !
கழலை பயில் செம் கையார் கழற்சிக் காயை ஆடும் சிவந்த கைகளுடைய பெண்களது
சீ வார் கழலை இரண்டையும் சீ ஒழுகும் கட்டி போன்ற தனங்கள் இரண்டையும்
செப்பு எனறு கிண்ணங்கள் என்று புகழ்ந்து
தீங்கு உள வினாவார் அவர்களுடைய தீமைகளை கருதாமல்
நலம் பேணும் அவர்களுடைய இன்பத்தை விரும்பும்
ஐவர் ஆவார் கழல் பஞ்சேந்திரியங்கள் நழுவுகிற
ஐ இரண்டாம் அவத்தையின் அன்று பத்தாவது அவஸ்தையாகிய மரணம் நேரும் போது
உன் பூ ஆர் கழலை உனது திருவடித் தாமரைகளை
எனக்கு அருள் எனக்குத் தந்தருள்