திரு வேங்கடத்து அந்தாதி 66/100 ஆரணன் போற்றும் காரணன் பூரணன் நாரணனே !

பூரணனாரணன் பொன்னுலகாளி புராரி கொடி-
வாரணனாரணன் வாழ்த்தும்பிரான் வடவேங்கடத்துக்-
காரணனாரணங்கனாயிறைவிகணவன் மன்னேழ்-
பாரணனாரணநென்பார்க்கு நீங்கும்பழுதவமே

பதவுரை : பூரணன் + ஆரணன் (பிரமன்)
வாரணன் + ஆர் + அணன்
காரணன் + ஆர் + அணங்கு
பாரணன் + நாரணன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபூரணன் எங்கும் நிறைந்தவன்
ஆரணன் பிரமன் ,
பொன்னுலகு ஆளி பொன்மயமான தேவ லோகத்துக்கு அரசன் ஆன இந்திரன் ,
புராரி திரிபுரங்களை எரித்த சிவன் ,
கொடி வாரணன் கோழியைக் கொடியில் உடைய முருகன் ,
ஆர் ஆணன் அவனுக்குப் பொருந்திய அண்ணன் ஆன விநாயகன் எல்லோரும்
வாழ்த்தும் பிரான் துதிக்கும் பிரபு
வட வேங்கடத்துக் காரணன் திருமலையில் இருப்பவன் எல்லாவற்றிற்கும் காரணமானவன்
ஆர் அணங்கு அனா இறைவி கணவன் விட்டு நீங்காத மஹா லக்ஷ்மியின் மணாளன்
மண் ஏழ் பாரணன் எழு உலகங்களையும் உண்டவன்
நாரணன்என்பார்க்கு நாராயணன் என்று சொல்பவர்க்கு
பழுது அவமே நீங்கும் தீவினைகள் பயன் இல்லாமல் ஒழியும்