திரு வேங்கடத்து அந்தாதி 67/100 ஏழுமலையானை எழுத்தெட்டினால் எண்ணி ஏத்தீர் !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபழுத்தெட்டிபோன்ற நடுச்செல்வர் பின் சென்று பல் செருக்கால்
கொழுத்தெட்டினை அளவு எண்ணம் அற்றீர் குவடு ஏறி மந்தி
கழுத்தெட்டி ண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை
எழுத்தெட்டினால் எண்ணி ஏத்தீர் பரகதி ஏறுதற்கேபதவுரை : பழுத்த + எட்டி (பழம்)
கொழுத்து + எள் + தினை
கழுத்து + எட்டி (நீட்டி)
எழுத்து + எட்டினால்

பழுத்த எட்டி போன்ற பிறருக்குப் பயன்படாத பழுத்த எட்டி மரம் போன்ற
நடுச்செல்வர் பின் சென்று புதிய செல்வந்தர்களின் பின் போய்
பல் செருக்கால் கொழுத்து பல கர்வங்களால் கொழுத்தவர்களாகி
எள் தினை அளவு கடவுளைப் பற்றி எள்ளளவும் தினை அளவு கூட
எண்ணம் அற்றீர் சிந்தனை இல்லாதவர்களே !
மந்தி குவடு ஏறி பெண் குரங்குகள் சிகரத்தில் ஏறி
கழுத்து எட்டி கழுத்தைத் தூக்கி
அண்டர் பத்தி நோக்கும் தேவ் லோகத்தைப் பார்க்கும்
வேங்கடக் காவலனை திருமலையில் உள்ள ஸ்வாமியை
பரகதி ஏறுவதற்கே பரமபதம் சேர்வதற்காக
எழுத்து எட்டினால் அஷ்டாக்ஷர மந்திரத்தால்
எண்ணி ஏத்தீர்தியானித்துத் துதியுங்கள்