திரு வேங்கடத்து அந்தாதி 69/100 வேங்கடவன் அடியாரை வணங்குவோருக்கு விண்ணவரும் ஒப்பார் !

தாழ்ந்தவருக்கந்ருவொக்குமோ பல தாரகையுஞ்-
சூழ்ந்தவருக்கன் சுடரொக்குமோ தொல்லரக்கரென்று
வாழ்ந்தவருக்கங்களைந்தான் வடமலைமாலடிக்கீழ்
வீ ழ்ந்தவருக்கன்பருக்கொப்பரோ வண்டமர் மெய்த்தவரேபதவுரை : தாழ்ந்த + அருக்கம்
சூழ்ந்த + அருக்கன்
வாழ்ந்த + வருக்கம்
வீழ்ந்தவருக்கு

தாழ்ந்த அருக்கம் இழிவான எருக்கஞ்செடி
தரு ஒக்குமோ பெரிய மரத்துக்கு ஒப்பு ஆகுமோ ?
பல தாரகையும் பல நக்ஷத்திரங்களும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ பரவும் சூரிய ஒளிக்கு ஒப்பு ஆகுமோ ?
அண்டர் மெய்த்தவர் தேவர்களும் முனிவர்களும்
தொல் அரக்கர் என்று வாழ்ந்த பழமையான அரக்கர்கள் எனப்பட்ட
வருக்கம் களைந்தான் கூட்டங்களை அழித்த
வட மலை மால் திரு வேங்கடமுடையானுடைய
அடிக் கீழ் வீழ்ந்தவருக்கு திருவடிகளை வணங்கியவர்களுடைய
அன்பருக்கு ஒப்பரோ பக்தர்களுக்கு ஒப்பு ஆவாரோ ?


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends