திரு வேங்கடத்து அந்தாதி 75/100 வேங்கடவா ! தொண்டர் இனம் தலைப்பெய்தனன் !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsமனந்தலை வாக்குறயெண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
இனந்தலைப்பெய்தனனீ தன்றியே இமையோரும் எங்கள்
தனந்தலைவா எனும் வேங்கடவாண தடங்கடலுள்
நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமேபதவுரை : மனம் + தலை
இனம் + தலைப்பெய்தனன்
தனம் + தலைவா
நனம் + தலை

இமையோரும் தேவர்களும்
எங்கள் தனம் தலைவா எனும் "எங்களுக்கு செல்வமே ! தலைவனே ! " என்று வணங்கும்
வேங்கட வாண திரு வேங்கடமுடையானே !
தடம் கடலுள் பெரிய பாற்கடலில்
நனம் தலை நாக அணையாய் பரந்த ஆதி சேஷன் ஆகிய சயனத்தை உடையவனே !
உற மனம் எண்ணி நன்றாக மனதால் தியானித்து ,
தலை வணங்கி உடலால் நமஸ்கரித்து ,
வாக்கு வழுத்தும் சொல்லால் துதிக்கும்
தொண்டர் இனம் தலைப்பெய்தனன் உனது அடியார்களுடைய கூட்டத்தோடு சேர்ந்தேன்
ஈது அன்றியே இதைத் தவிர
அன்பும் ஞானமும் அறியேன் பக்தி ஞானம் இவைகளை நான் அறிய மாட்டேன்