Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 76/100 தன்னை வெறுத்த க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 76/100 தன்னை வெறுத்த க

    திரு வேங்கடத்து அந்தாதி 76/100 தன்னை வெறுத்த கண்டாகர்ணனுக்கும் திருமால் அருளினான்

    ஞானக்கண்டாகனவொக்கும் பவந்துடை
    ஞ்சிருக்குந்-
    தானக்கண்டாகனற்சோதியென்றேத்துவன்றாலமுடன்
    வானக்கண்டாகனவண்ணா வென்
    றோதொலிவந்தடையா-
    வீனக்கண்டாகனர்க்கீந்தான் பரகதியென்னப்பனே




    பதவுரை : ஞான + கண் + தா + கனவு
    தான + கண்டா + கனல்
    வான + கண் + தா + கன
    ஈன + கண்டாகனற்கு

    நஞ்சு இருக்கும் தானக் கண்டா " விஷம் தங்கும் இடமான கழுத்தை உடையவனே !
    கனல் சோதி அனல் பிழம்பின் வடிவானவனே
    ஞானக் கண் தா ஞானம் ஆகிய கண்ணைக் கொடு
    கனவு ஒக்கும் பவம் துடை கனவு போன்ற பிறப்பை நீக்கு "
    என்று ஏத்து வல் தாலமுடன் என்று சிவனைத் துதிக்கின்ற வலிய நாவுடன்
    வானக்கண் தா காண வண்ணா "வானத்தில் தாவும் மேகம் போல் நிறம் உடையவனே "
    என்று ஓது ஒலி வந்து அடையா என்று திருமாலைத் துதிக்கும் ஓசை காதில் நுழையாத
    ஈன கண்டாகனற்கு இழிவான கண்டாகர்ணனுக்கு
    என் அப்பன் எனது தலைவனான திரு வேங்கடவன்
    பரகதி ஈந்தான் ஸ்ரீ வைகுண்டம் அருளினான்

    Last edited by sridharv1946; 21-08-13, 13:31.
Working...
X