Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 80/100 கேழல் , அரி , கண்ண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 80/100 கேழல் , அரி , கண்ண

    திரு வேங்கடத்து அந்தாதி 80/100 கேழல் , அரி , கண்ணன் , ராகவன் எல்லாம் வேங்கடவனே !

    இரணியனாட்டனிரணியனீரைந்தலையன் கஞ்சன்
    முரணியகோட்டி
    கத்திற்சரத்தின்முன்றாளிற்றுஞ்சத்-
    தரணியிற்குத்தியிடந்தெய்துதைத்தவன் சர்ப்பவெற்ப-
    னரணியகேழலரிராகவன் கண்ணனாகிவந்தே




    பதவுரை :


    அரணிய அரண் போல் காக்கும்
    சர்ப்ப வெற்பன் சேஷ கிரி என்னும் திருவேங்கட மலையின் நாதனே
    கேழல் இரண்யநாட்டன் வராஹனாக ஹிரண்யாக்ஷனை
    முரணிய கோட்டின் குத்தி வலிமையுள்ள கொம்பினால் குத்தியும் ,
    அரி இரணியன் நகத்தின் இடந்தும் நரசிம்ஹனாக இரணியனை நகத்தினால் பிளந்தும் ,
    ராகவன் ஈரைந்தலையன் ராமனாக பத்து தலை ராவணனை
    சரத்தின்எய்தவன் அம்புகளை தொடுத்தும் ,
    கண்ணனாக கஞ்சன் கிருஷ்ணனாக கம்சனை
    முன் தாளில் உதைத்தவன் முந்தி நீட்டிய காலினால் உதைத்தும் ,
    தரணியில் துஞ்சவந்தேபூமியில் எதிரிகள் இறக்கும்படி செய்ய வந்தவன் ஆவான்

    Last edited by sridharv1946; 22-08-13, 12:47.
Working...
X