திரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா ! உன் திருவடியே சிந்திக்கும் காலம் எது ?

வந்தித்திருக்குமறை போற்று வேங்கடவாண மல-
ருந்தித்திருக்குஙுமமணிமார்ப வுள்வஞ்சனையும்
புந்தித்திருக்கும் வெகுளியுங்காமமும் பொய்யும் விட்டுச்-
சிந்தித்திருக்குமதெக்காலம் யானுன்றிருவடியேபதவுரை : வந்தித்து + இருக்கு
உந்தி + திரு + குங்குமம்
புந்தி + திருக்கும்
சிந்தித்து + இருக்கும்

இருக்கு மறை ருக் முதலிய வேதங்கள்
வந்தித்துப் போற்று வணங்கித் துதிக்கும்
வேங்கடவாண வேங்கட மலையில் இருப்பவனே !
மலர் உந்தி திரு குங்குமம் நாபித்தாமரை , திருமகள் , குங்குமம்
அணி மார்ப இவைகளை அணிந்த மார்பை உடையவனே !
யான் உள் வஞ்சனையும் நான் மனத்தில் உள்ள வஞ்சனைகளையும்
புந்தி திருக்கும் அறிவின் மாறுபாட்டையும்
வெகுளியும் காமமும் கோபத்தையும் ஆசைகளையும்
பொய்யும் விட்டு பொய்யையும் ஒழித்து
உன் திருவடி சித்திக்கும் உனது திருவடிகளை தியானித்திருப்பது
அது எக் காலம் எப்பொழுதோ ?
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends