அம்மாடியோவ்...இவ்வளவு உயரமா?'' என்று வியக்கும்படி, உலகிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் ஆந்திர மாநிலம், பரிதாலாவில் கோயில் கொண்டிருக்கிறார். பிரம்மாண்டமாக இருக்கும் இவரை தரிசித்தால் வாழ்வில் எதிரிபயம் நீங்கி வெற்றி உண்டாகும்.
தல வரலாறு: அஞ்சனைக்கும், வாயுவுக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர். ராமன் சீதையைப் பிரிந்து வருந்திய போது அவருக்குத் துணை நின்றவர். ராமனிடமிருந்த கணையாழியை சீதையிடம் கொடுத்து, அவரிடமிருந்த சூடாமணியை ராமனிடம் சேர்த்தவர். "கண்டேன் சீதையை' என ராமனுக்கு நற்செய்தியை வழங்கியதால் "சொல்லின் செல்வன்' என்று போற்றப்படுபவர்.
ராமநாமத்தை ஜெபித்தவர்க்கு வேண்டிய வரம் அளிப்பவர். கடலில் சேதுபாலம் அமைக்க வானரங்களுக்கு தலைமை தாங்கியவர்.
இவருக்கு பல இடங்களில் உயரமான சிலைகள் உள்ளன. என்றாலும், இவரது பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஆந்திரா பரிதாலாவில் உலகிலேயே உயரமான அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இவர் "வீர அபய ஆஞ்சநேய ஹனுமான் சுவாமி' என்று அழைக்கப்படுகிறார். சிலையின் உயரம் 135 அடி(41 மீ). 2003 ல் கட்டப்பட்டது.
விஸ்வரூப தோற்றம்: ஆஞ்சநேயர் வலக்கையால் பக்தர்களுக்கு அபயம் அளித்து தன்னை நம்பி வருவோருக்கு வேண்டியதை அருள்வதாக உறுதியளிக்கிறார். இடக்கையால் தண்டாயுதத்தை பிடித்தபடி நின்றகோலத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பவளிப்பராக உள்ளார். அவரது நீண்டவால் கால்களின் முன் தரையில் வளைந்தபடியும், மேலாடை பாதம் வரை நீண்டும் இருக்கிறது. கழுத்தில் மாலையும், தலையில் கிரீடமும் அழகு சேர்க்கின்றன. சிலை முழுவதும் வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. தன்னைத் தரிசித்தவர்க்கு பயம் போக்கி தைரியம், வீரத்தை அளிப்பவராக இங்கு வீற்றிருக்கிறார்.
இருப்பிடம்: விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நெடுஞ்சாலையில் 25 கி.மீ., தூரத்தில் பரிதாலா.

ஆன்மிக கட்டுரைகள்Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends